சென்னை,ஏப்.25- சென்னை அய்.அய்.டி. டிஸ்கவரி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மய்யத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் 24.4.2023 அன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை அய்அய்டி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, துறைமுகங்கள், நீர் வழிப்பாதைகள், கடற்கரைகளுக் கான தேசிய தொழில்நுட்ப மய் யத்தின் பொறுப்பாளர் பேரா சிரியர் முரளி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி சங்கர், சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் சுனில் பாலிவால், நியூமங்களூர் துறைமுக ஆணையத் தலைவர் டாக்டர் வெங்கட ரமணா மற்றும் பேராசிரியர்கள், அய்அய்டி ஆய் வாளர்கள், மாணவர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர், இந்த மய் யத்தை திறந்து வைப்பது மிகச் சிறப்பான தருணம் என்று குறிப்பிட்டார்.
இதனை முன்மாதிரியாகக் கொண்டு விரைவில் மேலும் பல சிறப்பு மய்யங்கள் அமைக்கப்படும்.
பருவநிலை மாற்றம், கடல்சார் ரோபோக்கள், கடல்சார் தகவல் மற்றும் பகுப்பாய்வு, நவீன வடிவ மைப்பு மற்றும் உருவாக்கப் பிரிவு களில் பல்வகை செயல்பாட்டுடன் உலகத்தரத்திலான கடல்சார் ஆய் வகங்கள் விரிவாக்கப்படும்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ரூ.1.4 லட்சம் கோடி செலவில் 108 திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. இதுவரை ரூ.34,750 கோடி செலவிலான 43 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன என்றார். ரூ.67,759 கோடி செலவில் 34 திட் டங்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தேசிய அளவில் 2035-க்குள் ரூ.5.4 லட்சம் கோடி முதலீட்டில் 202 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் ரூ.1,21,545 கோடி செலவில் 228 திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக ரூ.58,000 கோடி செலவில் 567 திட்டங்கள் செயல் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உற்பத்தி என்பதை செயல்படுத்துவதற்காக துறைமு கங்கள், நீர்வழிப்பாதைகள், கடற் கரைகளுக்கான தேசிய தொழில் நுட்ப மய்யம் சென்னை அய்அய்டி டிஸ்கவரி வளாகத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் ரூ. 77 கோடி செலவில் அமைக்கப்பட் டுள்ளது.
ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக செயல்படும் இந்த நிறு வனம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால் களுக்கான தீர்வுகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாட்டுத் தயாரிப் புகளை உருவாக்குகிறது.
இந்தியா வில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா முன் முயற்சிகளை மேற் குறிப்பிட்ட துறைகளில் இந்நிறுவனம் மேம் படுத்துகிறது.