மகாராட்டிரா, ஏப்.25- மகா ராட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் சீரடியில் சாய் பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த கோயிலை ஷிஷிஷிஜி எனப்படும் சிறீ சாய் பாபா சன்ஸ்தன் ட்ரஸ்ட் நிர்வகித்து வருகிறது. தரிசனம் செய்ய பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கையை சீரடி உண்டியலில் செலுத்தி வருகின் றனர். இவற்றை உரிய முறையில் கணக்கிட்டு வங்கிகளில் வைப்புத் தொகையாக கோயில் ட்ரஸ்ட் செலுத்தி கொண்டிருக்கிறது.
சாய் பாபா கோயிலுக்கு 13 வங்கிக் கிளைகளில் கணக்குகள் இருக்கின்றன. இவற்றில் 12 வங்கிகள் கோயில் அருகிலேயே அமைந்துள்ளன. எஞ்சிய ஒரே ஒரு வங்கி மட்டும் நாசிக்கில் இருக்கிறது. இந்த வங்கிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக 11 கோடி ரூபாய் அளவிற்கு வைப்புத் தொகையை வழக்கமாக பெற்று வருகின்றன. இதில் 50 பைசா முதல் 10 ரூபாய் வரையிலான சில்லறை காசுகளின் எண்ணிக்கை தான் அதிகம் எனச் சொல்லப் படுகிறது.
ஒவ்வொரு மாதமும் சுழற்சி அடிப்படையில் ஆட்களை அனுப்பி காணிக்கைகளை வங்கி கள் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சில்லறைக் காசுகளை வங்கிகளில் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் சில்லறைக் காசுகள் அதிக அளவில் இருப்பதால் இடம் போதவில்லை எனக் கூறப் படுகிறது. ஏற்கெனவே வங்கிகளின் லாக்கர்கள் நிரம்பி வழி கின்றன.இந்த சூழலில் ஒவ்வொரு நாளும் சாய் பாபா கோயிலில் இருந்து சில்லறைக் காசுகள் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்படுவது பெரும் சுமையாக மாறி வருகிறது.
வங்கிகள் தங்களிடம் இட மில்லை என்றும், சில்லறைக் காசு களை நீங்களே வைத்துக் கொள் ளுங்கள் என்றும் கூறியுள்ளன. இதனால் சீரடி சாய் பாபா சன்ஸ்தன் ட்ரஸ்ட் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வருகிறது.
சில்லறைக் காசுகளை எங்கேயும் குவித்து வைக்க முடி யாது. அதற்கான வசதிகள் இல்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கியிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று சாய் பாபா கோயில் ட்ரஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ட்ரஸ்ட்டின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜாதவ், அகமது நகர் மாவட்டத்தில் உள்ள மற்ற வங்கிக் கிளைகளை தொடர்பு கொண்டு வருகிறோம்.அங்கு வாய்ப்புகள் இருந்தால் புதிதாக கணக்குகள் தொடங்கி வைப்புத் தொகையாக செலுத்த நடவ டிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.
இதேபோன்ற பிரச்சினை கடந்த 2019ஆம் ஆண்டு எழுந்தது. அப்போது சிறீ சாய் பாபா சன்ஸ்தன் ட்ரஸ்டில் தங்களது சிக் கலை வங்கிகள் முன்வைத்தன. சில்லறைக் காசுகளை வைக்க இடம் போதவில்லை.
வேறு நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுத்தன. அப் போது கோயில் வளாகத்திலேயே வங்கிகளுக்கு அறைகள் ஒதுக்கப் பட்டு காணிக்கை தொகையை வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் விதிமுறைகள் ஏற்காது என்று கூறி வங்கிகள் மறுப்பு தெரிவித்தன. தற்போது மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.