சென்னை, ஜன.8 சென்னை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை இதழியல் கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக் கழகம், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதி ஆகிய இடங்களில் 07.01.2026 அன்று திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் மதியம் 12.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவராக ப.வெங்கடேஷ், செயலாளராக ரொசாண்டோ நியமிக்கப்பட்டனர். இதில் பல்கலைக் கழக மாணவர்கள் சா.மூ.அபிநயா, சிறீதர், கோகுல், கிரிவிஷ், சந்தோஷ் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து,

மதியம் 2.00 மணிக்கு சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சென்னை மாநிலப் பல்கலைக்கழகத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக அமைப்பாளராக செ.க.ஆதித்யா லினார்டோ டாவின்சி நியமிக்கப்பட்டார். இதில் 10க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்த கு.பா.ஈஸ்வர் மூர்த்தி, சிறீ மோஹித், கலைச்செல்வன், திராவிட மாணவர் கழக ஆதித்யா லினார்டோ டாவின்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேற்கண்ட மாணவர் சந்திப்பு நிகழ்வுகளில் திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நாகை மு. இளமாறன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா, மாநில திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளர் ம.பூவரசன், வடசென்னை மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் ப.வெங்கடேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் திராவிட மாணவர் கழகம் கட்டமைப்பை ஏற்படுத்தியும், மேலும் தந்தை பெரியார் ஒருவர் தான் பெரியார், திராவிட மாணவர் கழகம் – திராவிடர் கழகத்தின் இலக்கு, செயல்பாடுகள், மாணவர்களின் கல்வி உரிமை சார்ந்த பிரச்சனைகள், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, திராவிடம் – ஆரியம், 2026இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட பலவற்றை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
