நெய்வேலி, ஏப். 25- கடலூர் அருகே வளையமாதேவி கிரா மத்தில் வயல் நிலங்களில் வாய்க் கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கிய நிலையில், பொது மக்களின் போராட்டத்தால் பின்வாங்கினர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி,கீழ் வளையமாதேவி, கரிவெட்டி, கத் தாழை உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று (24.4.2023) வளையமாதேவி கிரா மத்தில் நெய்வேலி என்எல்சி நிறு வனம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்த முயன் றது.
இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நி லையில் எந்த ஒரு அறிவிப்பும் இல் லாமல் வளையமாதேவி கிரா மத்தில் உள்ள வயல் நிலங்களில் என்எல்சி நிறுவனம் திடீரென வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை என்.எல்.சி நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு அழைக்காத நிலையில் எங்களுக்கு தரவேண்டிய இழப்பீடு இதுவரை வந்து சேர வில்லை.
இந்த நிலையில் திடீரென என்எல்சி நிறுவனம் பணிகளை தொடங்கியதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியில் நான்கு ஜேசிபி இயந்திரம் மூலம் தொடங்கிய என்எல்சி நிர்வாகம் மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.
என்எல்சி நிறுவனம் பேச்சு வார்த்தை அழைக்க வேண்டும். எங்களுக்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.