ஓய்வு பெற்ற மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியும், மிசோரம் மாநில மேனாள் ஆளுநருமான ஆ.பத்மநாபன் அவர்களின் 98-ஆம் பிறந்தநாளையொட்டி (டிசம்பர் 14), நேற்று (ஜனவரி 7) அவரை நேரில் சந்தித்துத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தங்களைச் சந்திக்க நானே வரவேண்டும் என்று ஆசைப்பட் டேன் என்பதாக மேனாள் ஆளுநர் பத்மநாபன் அவர்கள் தெரிவித்த போது, “இல்லை நானே வந்து அவ்வப்போது சந்திக்கிறேன். நீங்கள் உடல் நலத்துடன் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும்” என்று ஆசிரியர் கேட்டுக் கொண்டார்.
தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்ததில் பேருவகை கொண்ட அய்யா பத்மநாபன் அவர்கள், தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். தந்தை பெரியாருடன் ஆசிரியர் அவர்களும் தானும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தன் னுடைய சொந்த ஊரில், வீட்டில் மாட்டப்பட்டு இருப்பதைக் குறிப்பிட்டார்.
இளம்வயதில் தோழர்களுடன் அண்ணல் அம்பேத்கர் அவர் களைச் சென்னையில் சந்தித்த போது, “உங்களுக்கு இங்கு பெரியார் இருக்கிறாரே! அவரைப் பின்பற்றுங்கள்!” என்று அறிவுரை சொன்னதை நினைவுகூர்ந்தார்.
சென்னையில் மிகப் பொருத்த மான இடத்தில் பாபு ஜெகஜீவன் ராம் சிலையை நிறுவுவதற்கு ஆ.பத்மநாபன் அவர்கள் செய்த பணியினை சுட்டிக்காட்டிய தமிழர் தலைவர் அன்றாடம் நான் அதைக் கடக்கும் போதெல்லாம் தங்களை நினைத்துக் கொண்டே பயணிப்பேன் என்று தெரிவித்த போது மேனாள் ஆளுநர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பின்னர், சிறிது நேரம் உரையாடி, பழைய செய்திகளைப் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் போது,
“இப்படி ஒரு தலைவர் கிடைப்பது கஷ்டம்ப்பா. He is the only leader of the century. நல்லா பார்த்துக்கங்க!” என்று ஆசிரியர் அவர்களைக் கட்டியணைத்தபடி உடனிருந்தோரிடம் மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்கள் தெரிவித்தது நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.
உடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சென்றிருந்தார்.
