சென்னை, ஜன. 8- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்
பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகள், பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரியவையாகத் திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டைக் கொண்டாடுவதன் வாயிலாக மாணவர்களுக்குத் தனி உத்வேகம் ஏற்படும். அதன்படி, நடப்புக் கல்வி யாண்டில் (2025-2026) 370 பள்ளிகள் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளன.
இந்தப் பள்ளிகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்துக் கொண்டாடுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
