பவுண்டரீகபுரம், ஜன. 8- திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளரும், ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணை யரும், கு.வினோத், கு.தமிழ்மணி ஆகியோரது தந்தையுமாகிய பவுண்டரீகபுரம் கு.முருகேசன் படத்திறப்பு நிகழ்வு 06-01-2026 அன்று பகல் 11:30 மணி அளவில் பவுண்ட்ரீகபுரம் அவர்களது இல்லத் தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார் தலைமை யேற்று உரையாற்றினார்.
குடந்தை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் பீ.இரமேஷ், கோபி மாவட்டச் செயலாளர் குணசேகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் மறைந்த கு.முருகேசனின் படத்தினை திறந்து வைத்து நினைவு உரை ஆற்றினார்.
நிகழ்வில் உறவினர்கள் நண் பர்கள் கழகத் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
