திருவனந்தபுரம், ஜன.8- கேரள சட்டமன்ற 4ஆவது பன்னாட்டு புத்தகத் திருவிழா 7.1.2026 அன்று தொடங்கியது. சட்டமன்ற கட்டடத்தில் உள்ள சங்கரநாராயணன் தம்பி அரங்கில் நடைபெற்ற விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் விழாவிற்கு தலைமை தாங்கினார். புக்கர் பரிசு வென்ற பானு முஷ்டாக் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் கே. கலிலா சிறப்புரையாற்றினார். டி.பத்மநாபன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், அமைச்சர்கள் வி.சிவன் குட்டி, ராமச்சந்திரன் கடனப்பள்ளி, தலைமைக் கொறடா டாக்டர்
என்.ஜெயராஜ், மாவட்ட ஆட்சியர் அனு குமாரி ஆகியோர் பேசினர்.
துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமார் வரவேற்றார். சட்டமன்ற செயலாளர் டாக்டர் என்.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.
ஜனவரி 7 முதல் 13 வரை நடை பெறும் புத்தக திருவிழாவின்போது எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைவரும் சட்டமன்ற வளாகத்தை பார்வையிடலாம் என சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் அறிவித்துள்ளார்.
புத்தகத் திருவிழாவில் இந்தியாவி லிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். தினமும் நூல் விவாதம், வட கேரளத்தின் புகழ்பெற்ற தெய்யம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி 13 நிறைவு விழாவில் ஆளுநர் ராஜேந்திரசிங் ஆர்லேகர் தலைமை வகிக்க உள்ளார். நாட்டில் வேறு எந்த மாநில சட்டமன்றத்திலும் இத்தகைய புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பினராய் விஜயன்
சட்டமன்ற புத்தக திருவிழாவை துவக்கி வைத்து முதலமைச்சர் பேசுகையில், உலக ஏகாதிபத்தியம் ஒரு சுதந்திர நாட்டை ஆவேசமாகத் தாக்கும் கடுமையான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
வெனிசுலாவில், அதிபரும் அவரது மனைவியும் வேறொரு நாட்டி லிருந்து ஆயுதமேந்திய குழுவால் கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் பிடிவாதத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. கியூபா மற்றும் கிரீன்லாந்திலும் இதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
தங்கள் விருப்பத்திற்கு எதிராக நிற்கும் சுதந்திர நாடுகளை அச்சுறுத்தும் ஏகாதிபத்திய நடவடிக்கை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. உலகம் எதிர்கொள்ளும் இந்த அச்சு றுத்தலை அறிவொளி பெற்ற வாசிப்பு உலகம் விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது. அழிவு சக்திகளுக்கு எதிராக நிற்கவேண்டும் உலகில் வாசிப்பு எங்கு இறந்தா லும், புத்தக விழாக்கள் மற்றும் மெய் நிகர் வாசிப்பு நடத்தப்படும் கேரளா வில் வாசிப்பு மறைந்துவிடாது. மத மற்றும் வகுப்பு நல்லிணக்கம் சவால்களை சந்திக்கும் தற்போதைய சூழ்நிலையில், எழுத்தாளர்கள் நடு நிலையாக இருக்கக்கூடாது. நாட்டின் ஒற்றுமையை அழிக்கும் சக்திகளுக்கு எதிராக நாட்டின் அமை திக்காக அவர்கள் நிற்க வேண்டும். வாழ்க்கையை மேலும் வாழக் கூடியதாக மாற்றுவதில் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
முதலமைச்சர் அழைப்பு
மேலும் ஜாதி-மத போட்டியை உரு வாக்க திட்டமிட்ட போராட்டங்கள் நடைபெறும் தற்போதைய காலகட்டத்தில் இதை எதிர்க்க எழுத்தா ளர்களும் வாசகர்களும் ஒன்றி ணைந்து நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். மதம்தான் குடியுரிமையின் அடிப்ப டையாக இருக்கும் தற்போதைய அச்சமூட்டும் சூழ்நிலையில், சட்டமன்ற விருதைப் பெற்ற என்.எஸ். மாதவனின் ‘திருத்து’ மற்றும் ‘மும்பை’ கதைகள் சிறப்பு முக்கி யத்துவம் வாய்ந்தவை என்பதையும் முதலமைச்சர் நினைவுபடுத்தினார்.
விழாவில், என்.எஸ்.மாதவன் முதலமைச்சரிடமிருந்து சட்டமன்ற விருதைப் பெற்றார். கே.வி. சுதாகரன் எழுதி மாநில குழந்தைகள் இலக்கிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட
‘வி.எஸ்.: போராட்டம், வரலாறு, இதிஹாசம்’ மற்றும் சிந்தாவால் வெளி யிடப்பட்ட ‘அமெரிக்கா டு மெக்கா’ (ஆசிரியர்: டாக்டர் வி.எஸ்.ராஜேஷ்) ஆகிய புத்தகங்களை முதலமைச்சர் வெளியிட்டார். அவற்றை சபாநாயகர் ஏ.என். சம்ஷீர் பெற்றுக்கொண்டார்.
