சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் 24.4.2023 அன்று நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு 100ஆவது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை” நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்வில் சொற்பொழிவுகளாற்றிய ஆளுமைகள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். உடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் சே.ரா.காந்தி ஆகியோர் உள்ளனர்.
சென்னை, ஏப்.25- வள்ளுவர், வள்ளலார், பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்த தலை வர்களின் வரலாற்றை இளை ஞர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில், கல்லூரி மாண வர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பு ரையான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ 100ஆவது நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று (24.4.2023) நடைபெற்றது.
தலைமை வகித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தொடர்ச்சியான பரப்பு ரைகள் மூலம்தான் நல்ல கருத் துகளை விதைக்க முடியும். ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டுமென்று மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கூறு வார்.
அதுபோல, நல்ல கருத்து களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழின் பெரு மையை, தமிழினத்தின் பண் பாட்டை, தமிழ்நாட்டின் வர லாற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்கா கத்தான் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடத்தப்படு கிறது.
சமத்துவத்தை நோக்கி…:
தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளையும், தமிழ் இனத்தின் வரலாற்றையும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை, மக்களுக் காக உழைத்த தலைவர்களை, நாட்டின் வளத்தை தெரிந்தி ருக்க வேண்டும். வள்ளுவர், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் தெரிவித்த சமத்துவத்தை நோக்கியே திராவிட இயக்கம் பயணிக்கிறது.
சங்ககாலத் தமிழர் வாழ்க்கை, அறம் சார்ந்த வாழ்க்கை. இடைக்காலத்தில் புகுந்த சனாதனம் அறத்தைக் கொன்றது. தமிழ்ச் சமுதாயத் தில் ஜாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விதைத்தது. இதற்கு எதிரானப் போராட் டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வள்ளுவர், வள்ள லார் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் தந்தை பெரி யார் வரையிலான சமூக சீர்தி ருத்த தலைவர்களின் வர லாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்.
சமூக சீர்திருத்தத் தலைவர்களின் வெற்றி!
கோயிலுக்குள் நுழைய முடியாது, சாலைகளில் நடக் கக் கூடாது, படிக்கக் கூடாது, எதிரே வரக்கூடாது போன்ற தடைகள் எல்லாம் இப்போது இல்லை. இதுவே சமூக சீர்தி ருத்தத் தலைவர்களின் வெற்றி. காமராஜர் பள்ளிகளைத் திறந் தார். அண்ணாவும், கலைஞரும் கல்லூரிகளைத் திறந்தனர். உயர்கல்வியை மட்டுமின்றி, மாணவர்களுக்கான தகுதி களையும் உருவாக்கித் தருகி றது திமுக அரசு.
கல்வியுடன், தனித் தகுதிக ளும், திறமைகளும் அவசியம். அதிக மதிப்பெண் பெற்றாலும், தனித் திறமை கொண்டவர் களுக்கே நல்ல வேலை கிடைக்கிறது.
நான் முதல்வன் திட்டம்:
சுயமாகச் சிந்திப்பது, சிந் தித்ததை அடுத்தவருக்கு வெளிப்படுத்துவது இதுதான் அறிவுக்கூர்மை. இதை மனதில் கொண்டுதான் நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்வி தான்.
அதை சேகரித்துவிட்டால், மற்ற சொத்துகள் தானாக வந்து விடும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த விழாவில், இளைஞர் நலன் மற் றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்க ராஜ், துறைச் செயலர் ஜெ.குமர குருபரன், சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழ் இணையக் கல்வி கழக இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.