மக்கள் விருப்பப்படி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் 4 நாட்களில் 52 ஆயிரம் கோரிக்கைகள் குவிந்தன!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 8- தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களின் நேரடித் தேவைகளை அறிந்து அதற்கேற்ப வாக்குறுதிகளை உருவாக்க தொழில்நுட்ப ரீதியிலான புதிய முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். வெறும் மேடைப் பேச்சாக இல்லாமல், அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரிக்க பிரத்யேக கைப்பேசிச் செயலி, வாட்ஸ்அப், இணையதளம் மற்றும் ஏஅய் (செயற்கை நுண்ணறிவு) வலைவாசல் ஆகியவற்றை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரடியாகத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை (4 நாட்களில்) பெறப்பட்ட விவரங்கள்: வாட்ஸ்அப்: 29,036, இணையதளம்: 8,266, தொலைபேசி: 6,598, ஏஅய் வலைவாசல்: 5,680, மின்னஞ்சல் மற்றும் க்யூஆர் ஸ்கேன்: 2,440, மொத்தம்: 52,080 கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன.

முந்தைய வாக்குறுதிகளின் நிலை (2021) கடந்த 2021 தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 80 சதவீதம் (404 வாக்குறுதிகள்) நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றில் 40 பரிசீலனையிலும், நீட் ரத்து போன்ற ஒன்றிய அரசு சார்ந்த 37 கோரிக்கைகள் நிலுவையிலும் உள்ளன.

தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத போதும், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள்: மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். மகளிர் உரிமைத் தொகை & சொத்துப் பதிவில் 1 சதவீதம் சலுகை. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள். மக்களைத் தேடி மருத்துவம் & இன்னுயிர் காப்போம் (நம்மைக் காக்கும் 48). தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் விருப்பப்படி தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் திமுகவின் இந்த “அதிரடி” அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்
தமிழ்நாடு முதலிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!

சென்னை, ஜன. 8-  இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 1476 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இந்த சாதனை மூலம் இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெற்றிக்கான காரணங்கள்

தமிழ்நாடு இந்த இலக்கை எட்டுவதற்குப் பின்வரும் முக்கிய காரணங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது: மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி.  மிகவும் திறமை வாய்ந்த உலகத்தரம் மிக்க மருத்துவர்கள்.  அரசு மற்றும் தனியார் துறைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்புகள்.

இந்த மகத்தான சாதனைக்காகத் தங்களின் அர்ப்பணிப்போடு பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் இதற்குத் துணையாக நின்ற தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *