டிரம்புக்கு துணிவிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பொகொடா, ஜன.7– “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும்” என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.

வெனிசுலாவிலிருந்து போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு வரப்படுவதாக பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டிய நிலையில், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார்.

வான்வெளித் தாக்குதல்

அதைத் தொடர்ந்து, ஜன. 3 ஆம் தேதி காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இந்த விவகாரம் உலகளாவிய அரசியலில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.

இதுதொடர்பாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கூறுகையில், “நான் யாருக் காகவும் பயப்படவில்லை. நீ விரும்பினால் உனக்காக நான் இங்கு காத்திருக்கிறேன். படையெடுப்புகளையோ, படுகொலைகளையோ, ஏவுகணைத் தாக்குதல்களையோ நான் ஏற்கவில்லை.

நான் உளவுத்துறையை ஏற்றுக் கொள்கிறேன். உளவுத்துறையுடன் வாருங்கள். நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம். அரசியல் மாஃபியாக்களால் கொலம்பிய மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள்.

கொலம்பியர்கள் 7 லட்சம் பேருக்கு அவர்கள் மரண தண்டனை அளித்துள்ளனர். நான் மீண்டும் ஒரு ஆயுதத்தைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆனால், தாய்நாட்டிற்காக நான் மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயாரக இருக்கிறேன்” என சவால் விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *