இந்தோனேசியாவில் பலத்த மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

1 Min Read

ஜகார்த்தா, ஜன. 7- கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி நேற்று (6.1.2026) கூறியதாவது:

பல நாள்களாக பெய்த பருவமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு (5.1.2026) அதிகாலை ஆறுகளின் கரைகள் உடைந்தன. சேறு, பாறைகள், இடிபாடுகளுடன் வெள்ள நீரால் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனா். சியாவ் தகுலண்டாங் பியாரோ மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கின. இந்தச் சம்பவங்களில் 16 போ் உயிரிழந்தனா்; 148 பேரைக் காணவில்லை.

அவசர மீட்புப் படையினா் காவல்துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா் என்றார் அவா்.

முன்னதாக, இந்தோனேசியாவின் மிகப்பெரிய தீவான சுமத்ராவில் 52 நகரங்கள் மற்றும் மாவட்டங்களை கடந்த டிசம்பா் மாதம் தாக்கிய பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 1,178 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *