தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர்களின்
23 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது
கந்தர்வக்கோட்டை, ஜன.7- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின் படி மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு.
ஆசிரியர் அரசு ஊழியர்க ளின் 23 ஆண்டுகள் எதிர் பார்த்து காத்திருந்த கனவு திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு லட்சக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர்களின் குடும்பங்களிலும் மிகுந்த மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடந்த காலத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள்ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அப்பொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக போராட்டக் களத்திற்கே வந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ஆசிரியர் அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது கடந்த 2006க்கு முன் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர் பெருமக்களை 01.06.2006 தொகுப்பூ தியத்தை ஒழித்து காலம் முறை ஊதியத்தை அளித்து 53,000 ஆசிரிய பெருமக்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
கலைஞரின் வழியில் பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 03.01.2026ல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவரும் ஓய்வூதியம் பெறும் வகையில் இந்தியாவிற்கே முன்மாதிரியான ஒரு மகத்தான திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற அறி விப்பை வெளியிட்டு அனை வரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.
அகவிலைப்படி
இப்போது அறிவிக்கப் பட்டுள்ள இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும், 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும், ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும், அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும், புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதற்கும்,
முதலமைச்சருக்கு நன்றி
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை தங்கம் தென்னரசு, இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், உள்பட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
