“சிறீமத் பாகவத உரை” (4.14.45), நைஷாதர்களைப் பற்றியும், அவர்களின் ஆன்மிக விமோசனம் பற்றியும் விளக்குகிறது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
“நைஷாதர்கள் இயல்பிலேயே பாவச் செயல்களில் ஈடுபடுபவர் கள் என்பதால், அவர்கள் நகரங் களிலும் கிராமங்களிலும் வசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்களது உடல் தோற்றம் மிகவும் விகாரமானதாக (அழகற்றதாக) உள்ளது, மேலும் அவர்களின் தொழில்களும் பாவமானவையாக இருக்கின்றன.
“நைஷாதர்கள்” (Nishadas) என்பவர்கள் யார் என்பது பற்றி “சிறீமத் பாகவதம்” மற்றும் ‘மகாபாரத”த்தில் தான் விரிவான விளக்கம் உள்ளது. புராணம் என்றால் புளு மூட்டை என்பது புரியவில்லையா?
நைஷாதர்கள் யார்?
- வேன ராஜனின் கதை (பாகவதம் 4ஆவது காண்டம்)
புராணங்களின்படி, வேனன் என்ற மிகக் கொடூரமான அரசன் இருந்தான். அவன் இறைவனை வழிபடக் கூடாது என்று கட்டளையிட்டு, ரிஷிகளைத் துன்புறுத்தினான். இதனால் கோபமடைந்த ரிஷிகள், அவனது உடலைக் கடைந்தனர் (மந்தனம் செய்தனர்). அப்போது அவனது தீய குணங்கள் அனைத்தும் ஓர் உருவமாக வெளிவந்தது. அந்த உருவம் கரிய நிறத்துடனும், கரடுமுரடான உருவத்துடனும், செம்பட்டை மயிருடனும் இருந்தது.
அந்த உருவமே “நைஷாதன்” என்று அழைக்கப்பட்டது. வேனனின் பாவங்கள் அனைத்தும் அவனிடம் சென்றதால், அவனது சந்ததியினர் காடுகளில் வசிக்கும் வேட்டைக்காரர்களாகவும், மீனவர்களாகவும் நிலத்தை உழுது கடினமான உழைக்கும் நீசர்களாகவும் மாறினர் என்று பாகவதம் கூறுகிறது.
- சமகால வரலாற்றுப் பார்வை
வரலாற்று ரீதியாக, பண்டைய இந்தியாவில் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டு, காடுகளிலும் மலைகளிலும் ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் வாழ்ந்த மக்களைக் குறிக்க “நைஷாதர்” என்ற பொதுவான சொல் பயன்படுத்தப்பட்டது. புராணம் என்றால் புளுகு மூட்டை என்பது புரியவில்லையா?
