மாவீரன் மாயவரம் சி. நடராசன் பிறப்பு (7.1.1902)
மாயவரம் நடராசன் என்ற பெயர் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் அழியா இடம் பெற்ற பெயராகும்.
வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திட்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், தந்தை பெரியாரின் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர், பெரியாரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார்.
தந்தை பெரியார் எதிர்கொண்ட கடும் எதிர்ப்புகளுக்கிடையேயான பணியில், பெரியாரை பாதுகாக்கும் பெரும் பொறுப்பேற்று – மெய்க்காப்பாளராக – கூட்டங்களில் கலவரம் செய்யும் காலிகளை விரட்டி அடிக்கும் வீரராக – பெரியார் செல்லும் இடங்களுக்கு முன்பே சென்று களம்காக்கும் சிப்பாயாக இருந்தவர் மாயவரம் நடராசன் ஆவார்.
இவர் சிறந்த எழுத்தாளருமாவார். ‘வெற்றிமுரசு’ எனும் இதழைத் தொடங்கி நடத்தியவர். தந்தை பெரியாருடன் கீழை நாட்டுப் பயணம் சென்றவர்.
இயக்கத் தலைமையை உயிரைப்போல் போற்றியவர். கட்டுப்பாடுமிக்க இவரைப் போல் உழைக்க வெகு சிலரே உளர்.
மாயவரம் நடராசன் மறைந்தபோது ‘சுயமரியாதை இயக்கத்தில் அவருடைய இடத்தை பூர்த்தி செய்கிற மாதிரி ஒருவரும் வரவில்லை’’ என்று தந்தை பெரியார் கூறினார்.
‘தலைவரால் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படு கிறதோ அதன்படி படையை நடத்திய தளபதி’’ என்று குடிஅரசு வீரவணக்கம் செலுத்தியது.
வாழ்க மாயவரம் நடராசன்.
இன்று அவருடைய பிறந்த நாள் (7.1.1902)
