டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
* கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்க்கு சிபிஅய் சம்மன்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்யிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்அய்ஆர் பணிக்கான மொபைல் ‘ஆப்’அய் உருவாக்கியது பாஜகவின் அய்டி பிரிவு: மம்தா பகீர் குற்றச்சாட்டு.
* வாக்காளர் பெயரில் பிழை இருப்பதாக கூறி, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ். திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடகாவை 2792 நாட்கள் என்ற அதிக நாட்கள் ஆட்சி செய்த முதலமைச்சர் என்ற சாதனையை சித்தராமையா படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
* அஜித் அணி – பாஜக இடையே மகாராஷ்டிராவில் லடாய்: : ‘நீங்கள் செய்த ரூ. 40,000 கோடி வளர்ச்சிப் பணிகளை காட்டுங்கள்’, பாஜக எம்எல்ஏ மகேஷ் லாங்கேவுக்கு அஜித் பவார் சவால். பிம்ப்ரி-சின்ச்வாடில் பாஜகவின் அய்ந்தாண்டு கால ஆட்சி மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். ”நீங்கள் செய்த ரூ. 70,000 கோடி நீர்ப்பாசன ஊழல்”, வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது என அஜித் பவார் நோக்கி பாஜக எம்.எல்.ஏ. நினைவூட்டல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காலநிலை நடவடிக்கை, உயர் கல்வியில் மொத்தச் சேர்க்கை ஆகியவற்றில் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்: திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அறிக்கை
தி டெலிகிராப்:
* ஆபரேஷன் சிந்துர் மற்றும் வரி உயர்வு: பஹல்காம் தாக்குதல் நடந்த இரண்டு நாட் களுக்குப் பிறகு, ஒரு முன்னாள் டிரம்ப் ஆலோச கரால் வழிநடத்தப்படும் ஒரு பரப்புரைக் குழுவை மோடி அரசு நியமித்தது. மேலும், ஆபரேஷன் சிந்துர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே தீவிர பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* முதன்முறையாக, பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு: 2026-2027 நிதி யாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
– குடந்தை கருணா
