காஞ்சிபுரம், ஏப். 25- காஞ்சிபுரம் – வையாவூர் சாலையில் உள்ள எச்.எஸ் அவென்யூவில் அமைக் கப்பட்டுள்ள பூங்காவில், 16.4.2023 அன்று மாலை 5.30 மணியளவில், ‘காஞ்சி தமிழ் மன்றம்’ என்ற புதிய அமைப் பின் தொடக்க விழா நடை பெற்றது.
ஒருங்கிணைந்த அண்ணா நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள இசையாசிரியர் சுகந்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி னார்.
மாமல்லன் பள்ளியின் தமி ழாசிரியர் ர. உஷா அனைவ ரையும் வரவேற்றார்.
இசையாசிரியரும் அவரு டைய மாணவர்களான கவின் நட்சத்திரா, தமிழினி வெண்பா ஆகியோர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் ‘வான மழைநீயே’ என்ற பாடலை மிகச்சிறப்பாகப் பாடி அனை வரையும் மகிழ்வித்தனர்.
உலகப் பொதுமறை திருக் குறள் பேரவையின் மாணவர் கள் அய்ந்து பேர், ஆளுக்கொரு அதிகாரம் திருக்குறள் சொல்லி, அதற்கான விளக்கங்களைக் கூறினர். திருக்குறள் பேரவை அமைப்பாளர் குறள் அமிழ் தன், இப்பகுதியில் திருக்குறள் வகுப்பு ஒன்றைத் தொடங்கி மாணவர்கள் பயன்பெற உதவு மாறு வேண்டுகோள் விடுத் தார்.
அய்ந்திணை கலைப் பண் பாட்டு இணையத்தின் பொறுப் பாளர் கவிஞர் அமுதகீதன் அவர்கள் தமிழ்மொழி பற்றி உணர்ச்சிபூர்வமான கவிதை யைப் பாடினார்.
கவிஞர் மு. தேவேந்திரன் அவர்களின் கவிதையை பொறி யாளர் உ.க. அறிவரசி வாசித் தார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற ஒருங்கிணைந்த அண்ணா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் எம். பாஸ்கரன் தலைமை உரையாற்றினார். அவர் தம் உரையில், மன்ற நிகழ்ச்சிகள் மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற வேண் டும் என்றும் மக்கள் பயன்பெறு மாறு நிகழ்ச்சிகள் அமைய வேண்டும் என்றும் திருக்குறள் வகுப்பைத் தொடங்க வேண் டும் என்றும் அதற்கு எல்லா வகையிலான ஒத்துழைப்பை யும் குடியிருப்போர் சங்கம் தரும் என்றும் கூறினார்.
காஞ்சி தமிழ் மன்றத்தின் அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன் ஏப்ரல் 16 இன் வர லாற்றுச் சிறப்புகளை எடுத்துக் கூறினார். மன்றத்தின் குறிக் கோள் ‘எல்லோருக்கும் எல்லா மும் கிடைக்க வேண்டும்’ என்றும் ஆர்வத்துடன் வரும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மர புக் கவிதை, ஹைக்கூ கவிதை, சிறுகதை, புதினம் ஆகியவை எழுத பயிற்சியளிக்கவும் புத்தக வாசிப்புத் திறனை வளர்த்தல், பேச்சுத் திறனை வளர்த்தல், பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்தல், ஆண்டுக்கு ஒரு முறை தொகுப்பு நூல் வெளியிடல் முதலிய நோக்கங்கள் குறித்து உரையாற்றினார்.
காஞ்சி மாநகரில் இலக்கிய அமைப்புகளை நடத்திவரும் பேராளர்கள் அறிவு வளர்ச்சி மன்றம் – நாத்திகம் நாகராசன், காஞ்சி வெ.நா வின் இலக்கிய வட்டம் – புல்வெளி காமராசன், அய்ந்திணை கலைப் பண் பாட்டு இணையம் – கவிஞர் அமுதகீதன், உலகப் பொது மறை திருக்குறள் பேரவை – குறள் அமிழ்தன், பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் – கவிஞர் கூரம் துரை, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் – அ.வெ. முரளி, அறிஞர் அண்ணா பேரவை – வழக்குரை ஞர் பூ. இராஜி, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு – காஞ்சி அமுதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் – கு. ஆறுமுகம், பேசும் கலை வளர்ப்போம் – மருத்துவர் ஆறுமுகம் ஆகியோரைப் பாராட்டும் விதமாக அனை வருக்கும் பயனாடை அணி வித்து புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும் காஞ்சி செம் மொழித் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கவிஞர் கூ.வ. எழிலரசு ‘காஞ்சி தமிழ் மன் றத்தைத்’ தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அவர் தம் உரையில், தமிழ் மொழியின் தொன்மை, தமிழர் பண்பாடு, சங்க இலக்கியத்தின் மேன்மை, திருக்குறளின் சிறப்புகள், தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் களின் சிறப்பு, அறிஞர் அண்ணா அவர்களின் மொழிப் புலமை முதலியவை குறித்து தமிழருவி யாக அனைவரும் மகிழும்படிப் பொழிந்தார். ஆசிரியர் தே. நாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறி னார்.
நிகழ்வில் குடியிருப்போர் சங்கத்தின் பொருளாளர் ஏ. சுரேஷ், ஆசிரியர் புகழேந்தி, வெ. மார்க்ஸ், முருகன், கிருஷ் ணன், கவிஞர் நரேந்திரன், தயா ளன், இராமதாஸ், இராதா கிருஷ்ணன், சின்னதம்பி, பால கிருஷ்ணன், இராணுவப் புலவர் பரமானந்தம், கவிஞர் ஜெகநாதன், கி. இளையவேள், சீத்தாவரம் ஆ. மோகன், ஒலி ஒளி சேகர், மருத்துவர் சத்திய ப்ரியா, உமாமகேஸ்வரி, சந் தோஷ், கபிலன், நந்தகுமார், தினேஷ், ஆதித்யன், கிஷோர் உள்ளிட்டோரும் தாய்மார் களும் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் நூல்கள் பரி சளிக்கப்பட்டன. அனைவருக் கும் தேனீர் வழங்கப்பட்டது. மாதந்தோறும் தமிழ் மன்ற நிகழ்ச்சியை நடத்துமாறு பல ரும் வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சி தமிழ் மன்ற நிகழ்ச்சி மக்களிடம் ஒரு புத்துணர்வை உண்டாக்கியது.
சிறீராம் சப்ளையர்ஸ், ரமேஷ், நாகராசன், லோட்டஸ் ராஜேஷ், சந்தானகிருஷ்ணன், புகழேந்தி, வழக்குரைஞர் கோதண்டராமன், பல்பொருள் அங்காடி ஜார்ஜ் ஸ்டீபன், கவிதா மருந்தகம் ஞானம், சங்கப் பொருளாளர் ஏ. சுரேஷ், பக்தவத்சலம் தொழில்நுட்பப் பயிலகம் முருகன் உள்ளிட் டோர் நிகழ்ச்சி நடத்த ஊக்கு வித்தனர்.