25.4.2023
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு 12 மணி நேர பணி அமலாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி வைத்தார்
*’பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள்’ அமைப்பின் மேனாள் தலைவர் பல பாலியல் குற்றங்களில் குற்றவாளி என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா
* ஆளுநர்கள் விரைவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் எதிர்க் கட்சிகள் ஒற்றுமை குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு
தி டெலிகிராப்
றீ தான் ஆளுநராக இருந்த போதும், வேளாண் சட்டம், பாஜக சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி யுள்ளதாக, ஜம்மு காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக், அமித் ஷாவிற்கு பதில்.
– குடந்தை கருணா