ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப் பணியிடங்கள் 10ஆம் வகுப்பு போதுமானது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.6- இந்திய ரயில்வே, 10ஆம் வகுப்பு தகுதிக்கு 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது, பணியிடங்கள், தகுதி, விண்ணப்பக் கட்டணம், கடைசி தேதி குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை சேவை நிறுவனமான ரயில்வே, குரூப் டி, குரூப் சி, குரூப் பி உள்ளிட்ட பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. தற்போது குரூப் டி பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 22,000 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த குரூப் டி பணியிடங்களில் சில பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அய்.டி.அய் படித்திருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த குரூப் டி பணிகளில் பல்வேறு பதவிகள் உள்ளன.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 6 கோட்டங்கள் உள்ளன.  சொந்த ஊருக்கு அருகிலே பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

பணியிடங்கள்: 1. அசிஸ்டெண்ட் ஒர்க்ஷாப் (அய்.சி.எஃப்), 2. அசிஸ்டெண்ட் கேரேஜ் அண்ட் வேகன், 3. பாயிண்ட்ஸ் மேன், 4. அசிஸ்டெண்ட் எஸ் அண்ட் டி, 5. அசிஸ்டெண்ட் ஒர்க்ஷாப், 6. அசிஸ்டெண்ட் டி.ஆர்.டி, 7. அசிஸ்டெண்ட் டி.எல் அண்ட் ஏ.சி ஒர்க்ஷாப், 8. அசிஸ்டெண்ட் டி.எல் அண்ட் ஏ.சி, 9. அசிஸ்டெண்ட் லோகோ ஷெட், 10. டிராக் மெயிண்டனர், 11. அசிஸ்டெண்ட் டிராக் மெசின், 12. அசிஸ்டெண்ட் பிரிட்ஜ், 13. அசிஸ்டெண்ட் பி.வே.

குரூப் டி பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு 21.01.2026 முதல் தொடங்கி 20.02.2026 அன்று முடியும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் எந்த ரயில்வே மண்டலத்திற்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் கணிதம், திறனறிவு, பொது அறிவு கேள்விகள் இடம்பெறும். 100 மதிப்பெண்களுக்கு 85க்கு மேல் டார்கெட் வைத்து படித்தால் எளிதாக வேலை பெறலாம். கணினி வழித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்களுடன் நடைபெறும். இதற்கான கால அளவு ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *