அடீஸ் அபாபா, ஜன. 6- நைஜீரியாவின் போதைப்பொருள் அமலாக்க முகமை (NDLEA), லாகோஸ் துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பலில் இருந்து 31.5 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கைப்பற்றியது.
கரீபியன் தீவுகளில் இருந்து கப்பலில் அதிக அளவு போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் பெயரில் அருணா ஹில்யா என்ற கப்பல் நைஜீரிய துறைமுகத்தில் சோதனையிடப் பட்டது. இதில் அதிக அளவு போதைப்பொருள் கண்டறியப் பட்டது உடனடியாக கப்பலின் கப்பலின் கேப்டன் சர்மா சஷி பூஷன் உட்பட மொத்தம் 22 இந்திய மாலுமிகள் கைது செய்யப்பட் டுள்ளனர்.
கடந்த ஜனவரி 2, 2026 அன்று நடத்தப்பட்ட சோதனையில், கப்பலின் மூன்றாவது பகுதியில் (Hatch 3) மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டறியப் பட்டது.
நைஜீரிய அதிகாரிகள் இந்தக் கடத்தலில் கப்பல் ஊழியர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 22 பேரும் லாகோஸில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதத்தில், இதே துறை முகத்தில் பிரேசிலில் இருந்து வந்த கப்பலில் போதைப்பொருள் கடத்தியதாக 20 பிலிப்பைன்ஸ் நாட்டு மாலுமிகளும் கைது செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
