சென்னை, ஜன.6 தமிழ்நாட்டில் தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று (5.1.2026) முதல் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.
பரிசுத் தொகுப்பின் விபரங்கள்
தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்த ஆண்டு பின்வருபவை இடம்பெறுகின்றன: 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க் கரை ஒரு முழு நீளக் கரும்ப ரூ.3,000 ரொக்கப் பணம்
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.6,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
டோக்கன் விநியோகம்
மற்றும் கட்டுப்பாடுகள்
நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, டோக்கன் வழங்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.
நியாயவிலைக் கடை பணி யாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். டோக் கனில் பொருட்கள் வழங்கப் படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டி ருக்கும். இந்தப் பணிகளை நாளைக் குள் (ஜனவரி 7) முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.
விநியோகம் தொடக்கம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் (ஜனவரி 8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினமே அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
