தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,ஜன.6- தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக தலைமையிலான கூட்டணியைவிட ஒரு வலுவான அணி இதுவரை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. பல மாதங்களாக அதிமுக, பாஜக அழைத்தும் யாரும் அவர்களுடன் கூட்டணிக்கு சேரவில்லை. திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்கிற நிலை வந்ததாக மார்க்சிஸ்ட் கருதவில்லை.

தனிப்பெரும்பான்மை கிடைத்த பிறகு, எதற்காக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு, அவசியம் எழவே இல்லை. அதிமுக – பாஜக லாவணி கச்சேரி பல மாதங்களாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சியா அல்லது அதிமுக ஆட்சியா என்ற பிரச்சினைக்கு முதலில் அவர்கள் தீர்வு காண வேண்டும். தமிழ்நாட்டின் வரலாற்றில் கூட் டணி ஆட்சி என்பதே இருந்தது கிடையாது.

அதிமுக கைப்பற்றி கொண்டி ருக்கும் பாஜக, தைரியமாக தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி என்கிறது. அதிமுகவும் பாஜகவும் எப்படி இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித்ஷாவின் பேச்சு, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *