அடேயப்பா! என்ன கண்டுபிடிப்பு? மாநிலங்கள் வளரும்போது நாடும் வளரும் என்று பேசி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதற்கெல்லாம் மூடு விழா போட்டாயிற்றா? முதலில் ஜிஎஸ்டி வரியின் பங்கை மாநிலங்களுக்கு சரி வர அனுப்புவது உண்டா? இதில்கூட ஓரவஞ்சனை உண்டு. தேர்தல் வருகிறது அல்லவா? இனிப் பல வண்ணங்களில் இதுபோல கயிறுகள் திரிக்கப்படும். வாக்காளர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!!