திருச்சூர், ஏப். 26- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவரது மகள் ஆதித்யசிறீ (வயது 8). ஆதித்யசிறீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யசிறீ நேற்று இரவு அலைபேசியில் வீடியோ பார்ர்த் துக் கொண்டிருந்தார். அப்போது அலைபேசி எதிர் பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.மோசமான பேட்டரி காரணமாக அலைபேசி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் குழந் தைகள் அலைபேசி பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் கூடுமானவரை குறைக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளனர்.