டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்குங்கள்; இல்லையேல் நிறுத்தி வையுங்கள், தேர்தல் ஆணையத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம். காங்கிரஸ் ‘கடும் கவலை’ தெரிவித்துள்ளது, இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ரத்து செய்ய ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: மனுஸ்மிருதி போதிப்பது என்னவென்றால், பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் நிதி ரீதியாக அதிகாரம் பெறக்கூடாது, அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதுதான். மனுஸ்மிருதியில் இருந்து உத்வேகம் பெறும் ஆர்.எஸ்.எஸ்., கிராமங்கள் இடமிருந்து அதிகாரத்தைப் பறித்து, அதை டில்லியில் மய்யப்படுத்தப்பட்டதாக வைத்திருக்க அரசாங்கத்திற்கு வழிகாட்டி உள்ளது,” என்று சித்தராமையா கண்டனம்.
தி இந்து:
* மோடி அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றியாக்க தொழிலாளர்களுக்கு சிஅய்டியு அழைப்பு
தி டெலிகிராப்:
* ‘ஆணாதிக்க அச்சுறுத்தல்: மனைவிகளை ‘வீட்டிலேயே பூட்டி வைக்குமாறு’ வங்காள பாஜக தலைவர் கூறியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்: மேற்கு வங்கத்தின் பாசிம் மேதினிபூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், லக்ஷ்மி பண்டார் திட்டத்தின் பயனாளிகளான பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விடாமல் கணவர்கள் தடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, கடுமையான அரசியல் எதிர்ப்பையும் ஆளும் கட்சியிடமிருந்து கண்டனத்தையும் தூண்டியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< பொதுப்பிரிவு பதவிகளும் இடஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு திறந்திருக்கும்: உச்ச நீதிமன்றம்: : பட்டியல் ஜாதிகள், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், பொதுப் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்கள் பெற்றால், பொதுப்பிரிவு பதவிகளுக்கும் தகுதியுடையவர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜி மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு.
– குடந்தை கருணா
