வள்ளல் பெருமான் ஹிந்து மதத்தையும் சைவ சமயத்தையும் எதிர்த்தாரா?

Viduthalai
1 Min Read

இப்படி ஒரு கேள்வியின் கீழ் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ (31.3.2023) கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளது. இதற்கு நாம் பதில் சொல்லவில்லை. அந்த வடலூர் வள்ளல் பெருமானே பதிலடி தந்துள்ளார் இதோ:

வள்ளலார் திருவருட்பா ஆறாம் திருமுறை

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே

மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

நால் வருணத்தைத் தோலுரித்து விட்ட பிறகு எங்கே உயிர் வாழ்கிறது ஹிந்து மதம்?

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *