பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பது போன்ற (AI) செயற்கை நுண்ணறிவு ஒளிப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்குகிறது நமது திராவிட மாடல் அரசு’ எனத் தெரிவித்துள்ளார்.
டில்லி தான் இந்தியாவா?
‘பராசக்தி’ டிரெய்லர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் சில காட்சிகள் (டிரெய்லர்) வெளியாகியுள்ளது. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை மய்யமாகக் கொண்டு, 1964ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடைபெறும் கதையாக இப்படம் தயாராகியுள்ளது. ‘டில்லிதான் இந்தியாவா?’, ‘தற்குறி..’, ‘தமிழர்கள் ஹிந்தித் திணிப்புக்குதான் எதிரானவர்கள் ஹிந்திக்கு அல்ல..’ உள்ளிட்ட வசனங்கள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
உடல் உறுப்புகள் கொடையில்
தமிழ்நாடு முதல் இடம்
சென்னை, ஜன. 5- நாடு முழுவதும் உடல் உறுப்புகள் கொடை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாநிலம் வாரியாக உடல் உறுப்புகள் கொடையில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 267 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 267 பேரின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டுள்ளது. 205 பேரின் உடல் உறுப்புகள் கொடையுடன் தெலங்கானா 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. 198 பேரின் உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு கருநாடகம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. 153 பேர் உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு மராட்டியம் 4ஆவது இடத்திலும், குஜராத்தில் 152 பேரின் உடல் உறுப்புகளும் கொடையாகப் பெறப்பட்டு 5 -வது இடத்தையும் பிடித்துள்ளது.
