காரமடை, ஜன. 5- கோவை காரமடை பெரியார் புத்தக நிலையம் மூலமாக ஒரே நாளில் ரூ.5000த்திற்கும் மேல் புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையானது.
திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
காரமடை பகுதியில் பெரியார் புத்தக நிலையம் பெரியார் படிப்பகம் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த புத்தக நிலையம் காரமடையில் இருந்தாலும் கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள கழகத் தோழர்கள் திராவிட இயக்க உணர்வாளர்கள் பலரும் தொடர்பு கொண்டு கழக வெளியீடுகளை குறித்து அறிந்து கொள்ள தொடர்பு கொள்கின்றனர்
நேரில் வர இயலாதவர்கள் அலைப்பேசியில் தொடர்பு கொண்டால் விரும்பும் கழக புத்தகங்களை அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று பரப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது
அது மட்டுமல்லாமல் கழகத் தோழர்கள் மூலமாக அல்லது சமூக வலைதளம், முகநூல், வாட் சாப், மூலமாக வெளியிடும் கழக செய்திகள் மூலமும் அறிந்து கொண்டு புத்தக நிலையத்தை பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
அந்த புத்தக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் விரும்பும் புத்தகங்களை அஞ்சல் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியும் நடை பெறுகிறது.
சில நேரங்களில் அரசு அதிகாரிகள், அலுவலக பணியில் உள்ளோர் தனியார் நிறுவன ஊழியர்கள் நேரில் வர இயலாத கொள்கை உறவுகள் அவசரமாக சில புத்தகங்கள் வேண்டும் என்றும் நீங்கள் நேரில் வந்து தர வேண்டும் என்றும் கொள்கை உணர்வோடு உரிமையோடு வேண்டுகோளை வைக்கின்றனர்.
அவர்களின் ஆர்வத்தை அறிந்து அவர்கள் கேட்கும் புத்தகங்கள் குறித்து வைத்துக் கொண்டு அதை சேகரித்து கொண்டு மீண்டும் அவர்களை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு சந்திக்கும் நேரத்தை உறுதி செய்து கொண்டு அவர்கள் விரும்பிய புத்தகங்களோடு புதிதாக வெளிவந்த சில புத்தகங்களையும் பரிந்துரைக்கும் வகையில் எடுத்து சென்று புத்தக நிலைய பொறுப்பாளர் அ.மு.ராஜா நேரில் சென்று சந்தித்து கழக வெளியீடுகளை பரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் கோவை மாவட்ட கழக தோழர்கள் ம.சந்திரசேகர், ஆ.பிரபாகரன் , திராவிடமணி, பழனியப்பன், தோழர் மகாலிங்கம், இலைக் கடை செல்வம், உள்ளிட்ட கழகத் தோழர்கள் பதிவு செய்த நாட்காட்டி டைரி புத்தகங்கள் நேரில் பெற்று வழங்கப்பட்டது
அதேபோல் பாலக்காட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர் வெங்கடேசன் அவர்கள் புத்தக நிலையத்தை தொடர்பு கொண்டு கழக வெளியீடுகளை பெற்று கொண்டார்.
பொள்ளாச்சி பகுதியில் பொறியாளர் பரமசிவம், மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து, தோழர் நாகராஜ் ஆகியோர் பதிவு செய்த புத்தகங்கள் நாட்காட்டி டைரி ஆகியவை பெற்று கொண்டார்கள்.
அதே போல ஜனவரி 3இல் கோவை பிரபல மருத்துவமனையில் (கங்கா) பணிபுரியும் மருத்துவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ‘குடிஅரசு’ தொகுபபு புத்தகங்கள் வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.
அவர் வெளிநாடு சுற்றுலா, வெளியூர் பயணம் சென்று வந்த பிறகு மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு பேசி சந்திக்கும் நேரத்தை உறுதி செய்து, ‘குடிஅரசு’ தொகுப்பு புத்தகங்களை மருத்துவர் ஆம்ஸ்ட்ராங்கிடம் பொறுப்பாளர் அ.மு.ராஜா வழங்கியபோது மகிழ்ச்சியோடு பெற்று கொண்டு உரிய நன்கொடை ரூ 5200 உடனே வழங்கி மகிழ்ந்தார் அய்யா அவர்களுக்கு நன்றி விடை பெற்றுக் கொண்டோம்.
2025 டிசம்பர் 27 தொடங்கி 2026 ஜனவரி 3 வரை ரூ.15,000 மதிப்புள்ள கழக வெளியீடுகள் பரப்பும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
