சிலம்பூர், ஜன. 5- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய கழகத் தலைவராக பணியாற்றிய சிலம்பூர் இரா. தமிழரசன் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி 4.1.2026 அன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மறைந்த தமிழரசனின் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார். தமிழரசனின் அண்ணன் மகன் ஒன்றிய தி.முக. இளைஞரணி அமைப்பாளர்இரா.அ. சதீஷ் வரவேற்புரையாற்றினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் இரா.கலியபெருமாள், இரா. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகம், காப்பாளர் சி.காமராஜ், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாநில ப.க.அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் க.கார்த்திக், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் க.மணிகண்டன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன் ஆகியோர் நினைவு உரையாற்றினர். பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தனது நினைவுரையில் மறைந்த தமிழரசனின் கொள்கைப் பற்று, தந்தை பெரியார் கொள்கையை கிராமத்தில் அவர் செயல்படுத்தியவிதம், தந்தை பெரியாரின் கொள்கையின் சிறப்புகளை விளக்கி நினைவேந்தல் உரையாற்றினார்.
தமிழரசனின் மகன் த.தென்தமிழன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்ச்சியில் காப்பாளர் சு. மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் இரா. திலீபன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா .அசோகன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர்,விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ. தமிழரசன், மாவட்டத் தொழிலாளரணி செயலாளர் வெ.இளவரசன், நிண்ணியூர் சா.ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன் ஆண்டிமடம் நகர செயலாளர் டி .எஸ். கே அண்ணாமலை, மாவட்ட தொழிலாளரணி துணைத் தலைவர் மா. கருணாநிதி பெரியார் பெருந்தொண்டர்கவரப்பாளையம் இரா.எ.இராமகிருஷ்ணன், தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் சி.தமிழ் சேகரன், ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் துரை.பிரபாகரன், ஆண்டிமடம் நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி, நகர துணை தலைவர் சுந்தர வடிவேல், கோரா (எ)கோபால் இராமகிருஷ்ணன்,செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், ஆண்டிமடம் சுந்தரமூர்த்தி நெய்வேலி பாவேந்தர் விரும்பிஉள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.
