சாதனைச் சிகரத்தில் தமிழ்நாடு

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவின் ஒட்டு மொத்த தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடப் பல மடங்கு முன்னிலையில் இருப்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2,60,061 ஆகும். இதில் 40,121 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. (15.24 விழுக்காடு தேசிய தொழிலாளர்கள்)

தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களாகக் கருதப்படும் குஜராத் (33,311) மற்றும் மகாராட்டிரா (26,539) ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு கணிசமான இடைவெளியில் முன்னிலையில் உள்ளது.

ஆந்திரப் பிரதேசம் (16,011), கருநாடகா (14,984) மற்றும் தெலங்கானா (13,446) ஆகிய அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் தொழில் கட்டமைப்பு மிகவும் வலிமையாக உள்ளது.

“தென்னிந்தியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் “தொழில்துறை தலைநகராக” உருவெடுத்துள்ளது. 40,000-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுடன் முதலிடத்தில் இருப்பது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகும்.

தமிழ்நாடு இத்தகைய இமாலய சாதனையைப் படைத்திருப்பதற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன.

தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் அதிகப்படியான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான உந்துசக்தியை வழங்குகின்றனர்.

தோல் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி எனப் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

ஆட்டோமொபைல், ஜவுளித் துறை, தயார் ஆடைகள் (ரெடிமேட்), தோல் பொருட்கள் உற்பத்தி களில் 60%, காலணிகள் உற்பத்தியில் 38% என இவற்றியெல்லாம் முதலிடம் வகிக்கிறது.

தடையற்ற மின்சாரம், சாலை வசதிகள் மற்றும் முக்கியத் துறைமுகங்களின் இணைப்பு ஆகியவை தொழிற்சாலைகள் அமைய முக்கியக் காரணங்களாக உள்ளன.

எெலக்ட்ரானிக் உற்பத்தி 40% மற்றும் ஏற்றுமதியில் 40 விழுக்காடு பங்குடன் முதலிடத்தில் கோலோச்சுகிறது.

2024–2025ஆம் நிதியாண்டில் 11.19 விழுக்காடு, வளர்ச்சியுடன் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் ஒளிர்கிறது.

பெண்கள் உற்பத்தித் துறை பணியாளர்களில் 42 விழுக்காடு எனவும், தொழில் முன்னோடிகளில் 30 விழுக்காடு எனவும் கணிசமான பங்குடன் உள்ளன.

சமீபத்திய கணக்கீடுகளின்படி தமிழ்நாட்டில் பெண்களின் எழுத்தறிவு 74%, ஆண்கள் எழுத்தறிவு 87% ஆகும். இந்தியாவில் குறைந்த பாலின இடைவெளி, அரசுப் பள்ளிகளில் இலவச உணவுத்திட்டம், சைக்கிள், புத்தகங்கள், சீருடைகள் போன்ற ஊக்கத் திட்டங்கள் காரணமாக தமிழ்நாடு தன்னிகரற்ற முறையில் தலைதூக்கி நிற்கிறது.

இந்திய அளவில் உயர்கல்வி(கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள்) மொத்த சேர்க்கை 27–28% என்ற நிலையில் தமிழ்நாட்டிலோ பெண்களின் உயர் கல்விநிலை 49 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இந்திய அளவில் ஒப்பீட்டுப் புள்ளி விவரங்கள் இதோ:

பெண் வேலை வாய்ப்பு – இந்திய சராசரி 41.7%, தமிழ்நாடு 44%. பெண்கள் வங்கிக் கணக்குகள் இந்திய வளர்ச்சி 39%, தமிழ்நாட்டிலோ 45% ஆகும்.

பெண்களின் சராசரி ஆயுள் – இந்திய அளவில் 71ஆண்டுகள், தமிழ்நாட்டிலோ74 ஆண்டுகள்.

மேலும்,பள்ளிகளில் இடைநிற்றல் இந்திய அளவில் தமிழ்நாட்டில்  மிக மிகக் குறைவாகும். இவ்வாறு எல்லா வகையிலும் தமிழ்நாட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் சிறப்பாக உள்ளன.

2026 சட்டப் பேரவைத் தேர்தலில் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ தளபதி மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் மலர்ந்து, தமிழ்நாட்டை வளர்ச்சித் திசையில் மலைக்கும் வகையில் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *