கருநாடக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்
பெங்களூரு, ஏப். 26 கருநாடக சட்டமன்றத்துக்கு வருகிற 10-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் தொடங்கி விட்டது. கருநாடக சட்டமன்ற தேர்தல் பா.ஜனதா இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பா.ஜனதா தலைவரும், மேனாள் அய்.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கருநாடக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமை தேர்தல் அதி காரியிடம் ஒரு கடிதம் வழங்கி யுள்ளார். அதில் கூறியிருப் பதாவது:-
தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருநாடக சட்டமன்ற தேர்தல் பா.ஜனதா நட்சத்திர பேச்சாளராகவும், சட்டமன்ற தேர்தல் கருநாடக பா.ஜனதா இணை பொறுப் பாளராகவும் உள்ளார். அவர் கருநாடகத்தில் முன்பு அய்.பி. எஸ். அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். பெங்களூரு நகர் உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல பொறுப் புகளில் அவர் பணியாற்றி உள் ளார். அவருக்கு கீழ் பணியாற்றிய காவல்துறை அதி காரிகள் பலர் தேர்தல் பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்த செல் வாக்கை பயன்படுத்தி பா.ஜனதா வேட்பாளர்கள் பயன் அடைய காவல்துறை அதிகாரி களுக்கு அவர் அழுத்தம் கொடுக்கிறார். மேலும் அவர் தனக்கு முன்பு இருந்த அதி காரத்தை பயன்படுத்தி பா.ஜனதா பயன் அடைய முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் அவர் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் ஆட்களை மாநிலம் முழுவதும் அனுப்புவதாக தகவல் கிடைத்துள்ளது. மேனாள் காவல்துறை அதிகாரி என்பதால் அவரது வாகனத்தை அதிகாரிகள் சோதனை நடத் துவது இல்லை. மேலும் காங்கி ரசின் சில தலைவர்களின் வீடு களில் வருமான வரி சோதனை நடத்த வைப்பேன் என்று மிரட் டுவதாகவும் தகவல் வந்துள்ளது. அவரின் செயல்பாடுகள் தேர் தலை நியாயமாகவும், நேர்மை யாகவும் நடத்துவதை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் கருநாடகத்தில் சட்டமன்ற தேர் தலை நியாயமாகவும், நேர்மை யாகவும் நடத்துவதை உறுதி செய்ய அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்யவோ அல்லது கருநாடகத்தில் தங்கவோ தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.