
தமிழர் தலைவரிடமிருந்து ‘கொள்கை வீராங்கனைகள்’ நூலினை 100 மகளிர் தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.


* மாநாட்டில் சாவித்திரிபாய் ஃபூலே படத்தைத் தமிழர்தலைவர் திறந்து வைத்தார். சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா செல்வின், சுகுணா அன்பழகன் ஆகியோர் முறையே தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் படங்களை திறந்து வைத்தனர். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், ஜோதிராவ் ஃபூலே,சாவித்திரி ஃபூலே ஆகியோருக்கு நடுவில் தமிழர் தலைவர் இருக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ஒளிப்படத்தை மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. ரவிச்சந்திரன், மும்பை கழகத் தலைவர் பெ.கணேசன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
