lஉலகின் 2ஆவது மிக நீளமான அழகான மெரினா கடற் கரையில் உணவுப் பொருள்கள், பொம்மைகள், பேன்சி பொருள் கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
l அரசு நிலம், நீர் நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார்கள் வந்தால் 30 நாள்களில் விசாரணையை துவங்கி 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந் தப்பட்ட அதிகாரிகள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
l சென்னையில் வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.1739.50 ஆக இருந்தது. ரூ.1,849.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டில்லி, கொல்கத்தா போன்ற பல நகரங்களிலும் விலை ஏற்றப்பட் டுள்ளது. இது உணவகங்களில் பொருள்களின் விலை ஏற்றத் திற்கும், தேநீர், காபி விலை யேற்றத்திற்கும் காரணமாக அமையும். எனவே இந்த விலை ஏற்றத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
l வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, நகர்ப்புற வாக்காளர்களைவிட, கிராமப்புற வாக்காளர்களிடம் இருந்து கணக்கெடுப்பு படிவங்கள் சேகரிப்பு அதிகம் காணப்படுகிறது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
l நாடு முழுவதும் ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ள நிலையில் அதற்கு காரணமாக நிலம் கையகப்படுத் தும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லையென்று ஒன்றிய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதன் தெரிவித்துள்ளார்.
l ஏற்றுமதியாளர்களின் கடன் அணுகலை மேம்படுத்துவதற்காக ரூ.5181 கோடி, ரூ.2114 கோடி பிணயை ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.7295 கோடி ஏற்றுமதி ஆதரவு தொகுப்பை ஒன்றிய அரசு வழங்க உள்ளது என ஒன்றிய வர்த்தக துறை கூடுதல் செயலாளர்அஜய்ராது தெரிவித்துள்ளார்.
l கிரேக் ஏஅய் முறையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பெண்களின்ஆபாச படங்கள் அதிகரித்துள்ளதால் அதுபோன்ற பதிவுகளை உடனே அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றியஅரசு உத்தர விட்டுள்ளது.
