காஞ்சிபுரம், ஜன.4 பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய பன்னாட்டு விமான நிலை யம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது.இதற்கு தொடக்கத்தி லிருந்தே ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரு கின்றனர். விவசாய நிலங்களையும், வாழ்விடங்களையும் பறிக்கக் கூடாது என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மக்களின் ஒருபுறம் போராட்டங் களைத் தொடர்ந்தாலும், அரசுத் தரப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக தங்கள்வீடுகளை இழக் கும் மக்களுக்கு மாற்று இடமாகப் புதிய குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மாதிரி வீடுகள் அமைக்கும் பணி தற்போது தொடங் கியுள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் எந்தத் தரத்தில் இருக்கும் என்பதை விளக்கும் வகையில் இந்த மாதிரி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
