உத்தரவு
ரயில் ஓட்டுநர்களுக்கு 9 மணி நேரம் பணி வழங்கு வதை அனைத்து மண்டலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை
சென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டத்தால் இளைஞர் காயமடைந்துள்ளார். தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
மாற்றம்
சென்னை அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் சாலை என புதிய பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்ப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.4.2023) திறந்து வைத்தார்.
கழிப்பறைகள்
சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பில் மக்களின் பயன்பாட்டுக்காக 954 பொதுக் கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன என தகவல்.
அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மைப் பணிகளுக்கு தனியாரை நியமிக்கும் போது, தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிப்பதை கட்டாயமாக்கு வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று டெண்டர் குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தரம் உயர்வு
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, செங்கல்பட்டு நந்திவரம் – கூடுவாஞ்சேரி ஆகிய 2ஆம் நிலை நகராட்சிகள் முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. பூந்தமல்லி, திருவள்ளூர் முதல் நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தேர்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.
மழை
தமிழ்நாட்டில் 29ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
அதிகாரம்
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு வழங்குவது என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அறிவுறுத்தல்
அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து எந்த புகாரும் வரக்கூடாது என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போக்கு வரத்து துறை அறிவுறுத்தல்.
முதலிடம்
ஒன்றிய அரசு நடத்திய நீர்நிலைகள் கணக்கெடுப்பில் 13,629 ஏரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற் றுள்ளது.
தொழில்நுட்பம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அய்என்எஸ் ராஜாளி கடற்படை வளாகத்தில், வானில் பறந்தபடி அளிக்கும் பயிற்சிகளை, அதிநவீன தொழில் நுட்ப கருவிகளுடன் தரையில் இருந்தவாறு அளிப்ப தற்காக அசோக் ராய் சிமுலேட்டர் பயிற்சி மய்யம் நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.