சென்னை உள்ளிட்ட பகுதிகளில், 2026ஆம் ஆண்டின் முதல் நாளில் பெய்த மழையால் புழல் ஏரி 100 சதவீதம் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோ குளோபுலின் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பது கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
சிவகாசியில் நடப்பாண்டு ரூ.450 கோடிக்கு மேல் காலண்டர் விற்பனை நடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இணைய வழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வின்சோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரூ.43 கோடியை முடக்கி, அமெரிக்க வங்கிக் கணக்கில் ரூ.489 கோடியை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக ரூ.505 கோடி பத்திரங்கள் முடக்கி அமலாக்கத்துறை வின்சோ நிறுவனர்கள் சவுமியா சிங்ரத்தோர், பவன் நந்தா ஆகியோரை கைது செய்தது. மேலும், இந்த வழக்கில் வின்சோ நிறுவனத்தின் ரூ.192 கோடியை முடக்கி உள்ளது.
திருமணமான பெண் தன் கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டுமா என சுயமாக முடிவெடுக்கலாம். அவருடைய விருப்பமும் சம்மதமும் மட்டுமே முக்கியம் என பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான பயணச்சீட்டு விற்பனை 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி வாங்கலாம். மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரம் வாய்ந்த நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடக்கிறது. சூரத் முதல் பில்மோரா வரையிலான 47 கி.மீ. தூரத்திற்கு பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
