கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

4.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அரசு ஊழியர், ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு:தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) அதிரடியாக உத்தரவிட்டார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆறு ஆண்டுகளுக்கு முன்பே (2019) மத்திய தணிக்கைத் துறை எச்சரித்தது. இந்தூர் குடிநீர் விவகாரத்தில் 15 பேர் பலி; மாசடைந்த குடிநீரால் 15 பேர் பலியான நிலையில் இந்தூரில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் மக்கள்: பாஜக ஆட்சியில் அவலம்

* வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: அதிபர் நிக்கோலஸ், மனைவி சிறைபிடிப்பு: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘இது ஒரு போர்க் குற்றச் செயல்’: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது குறித்து நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி கண்டனம்.

* டபுள் என்ஜின் சர்க்கார் அராஜகங்கள்: சத்தீஸ்கர் ராய்ப்பூர் மாலில் கிறிஸ்துமஸ் விழா அன்று சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேருக்கு ஜாமீன் – மேலும் அவர்களுக்கு ‘வீர வரவேற்பு’ அளிக்கப்பட்டது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாட்டின் 2025 முதலீட்டுச் சுழற்சியின் முக்கிய அம்சம் புவியியல் ரீதியாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொழில் பரவலே காரணம் ஆகும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம். 2025 ஆம் ஆண்டில் மட்டும், மாநிலம் 270-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றும், இதன் மூலம் ரூ. 2.07 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ராஜா கூறினார்.

தி இந்து:

* புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்திற்கு எதிராக ஜனவரி 10-ஆம் தேதி காங்கிரஸ் போராட்டம் தொடங்குகிறது. ‘ஆபத்தான அதிகாரக் குவிப்பைக்’ குறிக்கிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார்; புதிய சட்டத்தை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடுவோம் என்று கட்சி தெரிவித்துள்ளது.

* 2025-ஆம் ஆண்டின் விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (VBSA) மசோதாவை நிறைவேற்றுவதைத் தடுத்து கல்வியைக் காப்பாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு பொதுப் பள்ளிக் கல்வி முறைக்கான மாநில அமைப்பு-தமிழ்நாடு,  வலியுறுத்தல்.

* 2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80% வாக் குறுதிகள் நிறைவேற்றம்: வாக்குறுதியில் அறிவிக் கப்படாமலேயே பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தி டெலிகிராப்:

* அஜித் பவார் பாஜக தலைமையிலான அரசிலிருந்து விலகி, என்சிபி-யை என்சிபி (எஸ்.பி)-யுடன் இணைக்க வேண்டும்: சஞ்சய் ராவுத். பிம்ப்ரி சின்ச்வட் மாநகராட்சியில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக என்சிபி தலைவர் குற்றம் சாட்டிய ஒரு நாள் கழித்து, பாஜக தலைமையிலான அரசில் அஜித் தொடர்ந்து நீடிப்பது குறித்து ராவுத் கேள்வி எழுப்பினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* எந்த ஒரு ஜாதியும் ஒரு கோயிலின் நிர்வாகத்தின் மீது உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு ஜாதி என்பது மதப் பிரிவு அல்ல என்றும் அது வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பேளூரில் உள்ள அருள்மிகு சிறீதந்திரீஸ்வரர் கோயிலுக்கு அய்ந்து பரம்பரை அல்லாத அறங்காவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தபோது, நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *