கிருட்டினகிரி, ஏப். 26- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16.4.2023) அன்று மாலை 6 மணியளவில் கிருட்டின கிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் அரங்கில் பகுத்த றிவாளர் கழக மாவட்ட தலைவர் ச. கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செய லாளர் அ. வெங்கடாசலம் அனை வரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டம் திராவிடர் கழக மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா. மாணிக்கம் துணைத் தலைவர் வ. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் தொடக்க உரையாற் றினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ண மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிட மணி ஆகியோர் உரையாற்றினர். கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது கிருட்டினகிரி போக்குவரத்து காவலர் பெரியார் -அம்பேத்கரிய சிந்தனையாளர் சீதாராமன் கிருட்டினகிரி பெரியார் மய்யத் திற்கு இரண்டு மின்விசிறிகளை நன்கொடையாக வழங்கினார். அவருக்கு மாநில அமைப்புச் செயலாளர் ஊமை .ஜெயராமன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
அதன்பின் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.மோகன், பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் பாடுகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் சிறப்புரையாற் றினர்.
மேலும் இக்கூட்டத்தில் கிருட் டினகிரி நகர தலைவர் கோ. தங்க ராசன், ஒன்றிய தலைவர் த.மாது, காவேரிப்பட்டிணம் ஒன்றிய தலை வர் பெ.செல்வம், மாணவர் கழகம் செ.கலையரசி ,காவேரிப்பட்டணம் மேனாள் ஒன்றிய தலைவர் சி. சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.கோ. ராஜா, கிருட்டினகிரி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ச. கிருஷ்ணவேல், வேப்பனப்பள்ளி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஜெயின், ஊற்றங் கரை ஒன்றிய இளைஞரணி தலை வர் கோ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1. மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் ஒவ் வொரு மாதமும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 2. கிருட்டினகிரி மாவட்டத்தில் தொடர்ந்து அதி கரித்து வரும் ஜாதி, ஆணவக் கொலைகளுக்கு இக்கூட்டம் வன் மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.