26.4.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசுப் பள்ளிகளில் துப்புரவு தொழிலாளர் மற்றும் பராமரிப்பு நியமனங்களில் தமிழ் மொழி பேசத் தெரிந்த வர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கிய பகுதிகளை கேரளாவில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆபத்தான மனிதர்களால் நடத்தப்படும் நாடாக இந்தியா உள்ளது. பாஜகவில் இருந்து விடுபட 2024 கடைசி வாய்ப்பு. விவசாயிகள் ஒற்றுமையாக நின்று தங்கள் உரிமை களுக்காக போராட வேண்டும் என்று மேனாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கருத்து.
* முஸ்லிம் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் கருநாடக அரசின் முடிவை மே 9 வரை அமல்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தி ஹிந்து:
* கருநாடகாவில் ‘40% கமிஷன் அரசு’ என்ற குற்றச் சாட்டுக்கு தீர்வு காணுமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார்.
– குடந்தை கருணா