சென்னை, ஜன. 3- தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங் கெடுப்பதும், சங்பரிவார் சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிவருவதோடு மட்டுமின்றி, தமிழ் நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையிலும், சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் தீபம் ஏற்ற சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த Impeachment motion – பதவி நீக்க கோரும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்படி ஜி.ஆர்.சுவாமிநாதனை வேறு ஒரு உயர் நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம் 2.01.2026 அன்று தொடங்கப்பட்டது
இதில் பல்வேறு வழக்கு ரைஞர்கள் கையெழுத்திட்டு வருகிறார்கள்,
அதன் ஒரு பகுதியாக சமத்துவ வழக்குரைஞர் சங்க மாநில தலைவர் பார்வேந்தன் தலைமையில் பலர் பங்கேற்று கையெழுத்திட்டனர் – கையெ ழுத்து இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது – கையெழுத்து இயக்கத்தில் வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சுந்தரராஜன், திமுக மாணவர் கழக மாநில செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி, சட்ட மாணவர்கள் ,நாகராஜ் மற்றும் பார்த்தீசுவரன் ஆகியோர் பங்கெடுத்தனர்.
