டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் புதிய திட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம். ஏழை மக்களை பாதிக்கும் என கருத்து.
* மாண்டவர் மீண்டார்: வாக்காளர் இறந்ததாக பெயர் நீக்கப்பட்டவரை நேரில் ஆஜர்படுத்தியது திரிணாமுல் காங்கிரஸ். அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக், கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் அம்மூவரையும் அறிமுகப் படுத்தியதால் பரபரப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக ஆளும் ம.பி. இந்தூரில் அசுத்தமான குடிநீர் அருந்திய 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, “ஏழைகள் இறக்கும் போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருக்கிறார்” சுத்தமான நீர் என்பது ஒரு சலுகை அல்ல, அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமையை அழித்ததற்கு பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம், அதன் அலட்சியமான நிர்வாகம் மற்றும் உணர்வற்ற தலைமை மட்டுமே முழுப் பொறுப்பு என ராகுல் கடும் விமர்சனம்.
* பாஜக ஆளும் சத்தீஸ்கரில் வன்முறையாக மாறிய சுரங்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது பணியில் இருந்த ஒரு பெண் காவலரை சில ஆண்கள் ஆடையின்றி இழுத்துச் சென்றனர். இந்த வன்முறை டிசம்பர் 27 அன்று நடந்த நிலையில், பெண் காவலர் மீதான இந்தத் தாக்குதல் குறித்த காணொலி பின்னர் சமூக ஊடகங்களில் வெளியானது.
தி இந்து:
* “மது போதையும், அதை விட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ் நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் “சமத்துவ நடைப் பயணத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* மாநிலத்தில் பல மரணங்களுக்கு வழிவகுத்த ‘திட்டமிடப்படாத’ சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு பாரதிய ஜனதா கட்சியே பொறுப்பு என திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் காட்டம்.
தி டெலிகிராப்:
* ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தின் சமூக ஒற்றுமை குறித்த பாசாங்கு நாடக பேச்சை தோலுரித்த எதிர்க்கட்சிகள்: ஹிந்தித் திணிப்பு, கும்பல் படுகொலைகள் மற்றும் மொழி சிறுபான்மையினரை குறிவைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்.
– குடந்தை கருணா
