விருதுநகர், ஜன. 3- விருதுநகர் மாவட்ட கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 1.1.2026 அன்று காலை 11 மணியளவில், விருதுநகர் அகிலகத்தில், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தலைமையில் நடைபெற் றது.
கழக செயல்திட்டங் களை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், துணைச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், அமைப்பாளர் மா.பாரத், மாவட்டத் துணைத் தலைவர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, நகரச் செயலாளர் மு.முனியசாமி, க.எழிலன், சங்கரராஜ், மா.முத்துக்குமார், தஞ்சை அ.உதயபிரகாஷ் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் புலவர் வை.கண்ணையன் – இலக்குமி அம்மாள் இணையரது நினைவாக க.எழிலன் பெரியார் உலகம் நிதி ரூ.70,000 எழுபதாயிரம் வழங்கினார். மேனாள் மாவட்டத் தலைவர் சிவகாசி வானவில் வ.மணி, மேனாள் மகளிரணிச் செயலாளர் க.இலக்குமி அம்மாள், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பியின் தாயார் கா.கோமதி அம்மாள் ஆகியோரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலுடன் வீரவணக்கம் செலுத்தப் பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
விருதுநகரில் 21.01.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் “இது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி”; “இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தொடர் பரப்புரைக் கூட்டம் மற்றும் பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்வினை சிறப்புற ஏற்பாடு செய்து எழுச்சியுடன் நடத்துவதெனவும், பெரியார் உலகம் நிதி மாவட்ட பங்களிப்பாக பத்து இலட்சம் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. சாத்தூர் நகரக் கழகத் தலைவராக மு.அகிலனைத் தேர்வு செய்து மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவித்தார். நிறைவாக மாவட்டத் துணைச் செயலாளர் இரா.அழகர் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
