முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு
10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப் பிக்கும் அவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜன.6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன.31-இல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். <<exhttps://www.dge.tn.gov.in/>>www.dge.tn.gov.in<<>> தளத்தில் இறக்கம் செய்யப் படும் விண்ணப்பத்தை நிரப்பி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
திராவிடம் தமிழனுக்கு
எதிரானது அல்ல: திருமாவளவன்
எதிரானது அல்ல: திருமாவளவன்
இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தல், சமத்துவத்திற்கும் ஸநாதனத்திற்கும் இடையி லானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் வைகோ நடைப்பயண தொடக்க விழாவில் பேசிய அவர், ஸநாதனத்தை வீழ்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளோம் எனத் தெரிவித்தார். மேலும், திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை; அது தமிழ் மொழியை காக்கக் கூடியது என்றும் முழங்கியுள்ளார்.
2,700 பேர் மரணம்
2025-இல் இயற்கைச் சீற்றங்களால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025இல் மட்டும் 2,760 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், கனமழை, வெப்ப அலை என அதிதீவிர வானிலை நிகழ்வுகளே இந்த உயிரிழப்பு களுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
