‘‘இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே!’’ (2)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆண்டு தொடக்கம் என்பதில் சிறு உறுதிகள் எடுப்போர் நிலையில், நம்மில் ஒவ்வொருவரும் அவர்கள் எந்தவயதினரானாலும் ஆண்டுக்கு ஒரு முறை (வயது முதிர்ந்தவர்கள் என்றாலோ அல்லது தேவைப்பட்டாலோ) முழு உடல் மருத்துவப் பரிசோதனையை செய்து கொள்ளத் தவறவே கூடாது!

அந்த வசதிகள் இப்போது எங்கும் கிடைக் கின்றன!

அரசு பொது மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் ஸ்கேன் சென்டர்களிலோ,  நமது குடும்ப மருத்துவர் ஆலோசனை கேட்டு குறிப்புடன் சென்று முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக அவசியம் ஆகும்.

இதற்காக ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை பழக்கமாக்கி, பிறகு வழக்கமாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நமது பிறந்த நாளுக்கு முன்ேபா அல்லது பின்போ – மணநாள் அல்லது மறக்க முடியாது நினைவிலிருக்கும் நாள் – நாம் பின்பற்றும் தலைவர்கள் அல்லது நமது வாழ்விணையர், பிள்ளைகள் பிறந்த தேதி நினைவில் வருமானால் அதனையொட்டி செய்துகொள்ளும் பழக்கம் மிகவும் தேவை!

நோய் வருமுன்னர்  அறிந்து, சந்தேகங்களை மருத்துவர்களிடமும் கேட்டு எதையும் தொடக்க நிலையில் அறிந்தால், அதிலிருந்து ஆபத்தின்றி வெளியேறி நல்வாழ்வு வாழ்வதற்கு அது பெரிதும் நமக்கு உதவும் அல்லவா?

நமது உடலின் உறுப்புகள் பற்றிய தெளிவும் அவற்றை முறைப்படிப் பராமரிக்க, போதிய தூக்கம், செரிமானம், நடைப்பயிற்சி, சிறுசிறு உடற்பயிற்சிகளை வயதுக்கு ஏற்ப செய்து, நோயற்ற வாழ்வுக்கு நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ளல் தானே சரியான வாழ்க்கை முறையாகும்!

‘Metabolism’ என்ற ‘உடல் உறுப்பு நலம்’ என்பது மிகவும் அடிப்படையானதாகும்.

நோய் வருவதை உடலின் உறுப்புகள் போர் வீரர்களாக ஆகி போரிட்டு முறியடித்தால் – நோய் எதிர்ப்பு – தடுப்பாற்றல்   ஒவ்வொருவரின் உடலிலும் வலுவாக ஏற்படும். நமக்கு நோய்கள் வருவதை தடுத்துக் கொள்ளும்வழிமுறையில் முழு கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

‘Metabolic Health’ என்பது– நோய் வந்தபின் கவனித்து உடலுக்கான சிகிச்சைகள் செய்து மீளுவதற்கு உடல் நோய் எதிர்ப்பாற்றல் (Physical Immunity)  பெரிதும் உதவும்.

அதுபோல நம்மில் பலர் கவனச் சிதறலுக்கு மிகவும் ஆளாகும் நிலையில், மனதளவில் நோய் எதிர்ப்பு நிலையைப் (Mental Immunity) பெருக்கிட நாம் எதிர்மறை எண்ணங்களை விரட்டிட வேண்டும் என்பதும் முக்கியம்.

‘உடல் நலம்’ என்று கூறும்போது நம்மில் பலரும் ‘மனநலம்’ என்பதை ஒதுக்கி விட்டுப் பேசுதல் வாடிக்கையாகிவிட்டது!

உடல்நல மருத்துவர்களிடம் போகும் போது வெளிப்படையாக அவரிடம் சொல்ல முயலும் அதே நபருக்கு, மன அழுத்தம் – அது பல காரணங்களால் ஏற்பட்டிருக்கக் கூடும்.  உதாரணமாக பெரும் துயரம் – நமக்கு முக்கியமானவர்களின்,  மிகவும் நேசிப்பவர்களின் மரணம், அல்லது திடீர் அதிர்ச்சி தரும் செய்தியின் தாக்கம் – இப்படி பல காரணங்களாக இருக்கக்கூடும்.

இதனையும் மனத்தளவில் (Mentally) பரிசோதித்துக் கொள்ளுதல் இல்லாமல் வெட்கப்பட்டு – மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போவதற்குத் தயங்குவதோடு, ‘சிகிச்சைக்குப் போய் விட்டு வந்தோம்’ என்று நமக்கு நெருங்கியவர்களிடம்கூட ஏனோ மறைத்துக் கூறுவதும் –  தயக்கத்துடன், வேறு சமாதானமும் சொல்லிக் கொள்கின்றனர்.

சிலர் வெளிப்படைத் தன்மையோடு இதில் இருப்பார்கள். – சிலர் மிக நெருங்கிய உறவிடம் கூட  (கணவன் – மனைவி)தங்களுக்கு உடற்கோளாறு ஏதாவது இருக்குமானால் அதுபற்றி பகிர்ந்து கொள்ளக் கூச்சப்பட வேண்டாம் என்பதில் சரியாக இருப்பார்கள்.

இவ்வாறிருக்கையில், ‘உலகில் மனிதர்கள் பலவிதம்; அதில் ஒவ்வொருவரும் ஒருவிதம்’ என்று பாடிக் கொண்டே சமாதானம் காணுவது என்பது சரியான தேர்வா – சற்றுச் சிந்திப்பீர்!

(வளரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *