
திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 1.1.2026)

பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன் புத்தாண்டில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000 வழங்கினார். (சென்னை, 2.1.2026)

அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவடி பி.கே.ரங்கநாதன் புத்தாண்டில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து ‘அருந்ததி முரசு’ என்ற இதழை வழங்கினார். (சென்னை,2.1.2026)

தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், ‘டிச.3’ இயக்கத்தின் தலைவருமான தீபக் புத்தாண்டில் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை,2.1.2026)

கீற்று.காம் பாஸ்கர், வாசுதேவன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, 2005 முதல் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் எழுத்துகளை கீற்று.காம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து வரும் தகவலை தெரிவித்தனர். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 1.1.2026).

சிறுநீரகவியல் மருத்துவர் அ.தக்சானந்த், பொறியாளர் அ.சைலாநத் ஆகியோர் புத்தாண்டையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500/- வழங்கினார். (சென்னை, 1.1.2026)
