கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் ஒன்றியம் பிரிப்பு புதிய ‘வாணாபுரம்’ ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.3  கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து, புதிய வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மறுசீரமைப்பு

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு  அமைக்கப்பட்டது. இந்த உயர்மட்டக் குழு பல்வேறு கட்டங்களாக நடத்திய ஆலோசனைகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில், நிர்வாக வசதிக்காக ரிஷிவந்தியம் ஒன்றியத்தைப் பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

புதிய சீரமைப்பின்படி, தற்போதுள்ள ஊராட்சிகள் பின்வருமாறு பிரிக்கப்பட் டுள்ளன:

வாணாபுரம் ஒன்றியம்: புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒன்றியத் தில் 38 கிராம ஊராட்சிகள் இணைக்கப் பட்டுள்ளன.

ரிஷிவந்தியம் ஒன்றியம்: எஞ்சியுள்ள 22 கிராம ஊராட்சிகள் ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் கீழ் செயல்படும்.

இந்த புதிய ஒன்றிய உருவாக்கம் தொடர்பான முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு, இது குறித்து பொதுமக்களின் கருத்துகளை வரவேற்றுள்ளது. வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துகள் இருந்தால், பொதுமக்கள் அடுத்த ஆறு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பின் மூலம், அப்பகுதி மக்களுக்கு அரசுத் திட்டங்கள் விரைவாகச் சென்றடைவதோடு, நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *