வல்லம், ஏப். 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணி துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு:-
நிகழ்ச்சி – 1
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப் பணித்துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தில் போதைப்பொருள் மற்றும் மது போதை அடிமையாகுதல் குறித்த நிகழ்ச்சி மூன்றாமாண்டு வணிகவியல் மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது.
சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு ஹேசல் சமீர் கான் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து முனைவர் ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின், இணைப் பேராசிரியர் சமூகப்பணித்துறை மற்றும் இயக்குநர் (பொ) பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
அவர் தமது உரையில்:- மாணவர்கள் மத்தியில் இவ் விழிப்புணர்வு கொடுக்கப்படுவதற்கான காரணத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து இன்றைய மாணவர்கள் சமூக அக்கறையோடு போதைக்கு அடிமை யாகும் இளைஞர்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் எஸ்.பரமேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் இன்றைய சமூகத்திற்கு சமூகப்பணி எத்தனை அவ சியமென்றும் அதை பயில்வதற்கான விளக்கங்களையும் கூறினார்.
விழிப்புணர்வு பாடல்கள்
திருச்சி காஜா மலை மகளிர் மன்ற குடிபோதை மறுவாழ்வு மய்ய விழிப்புணர்வு கலைக்குழு கலைஞர்கள் பி.லெனின் மற்றும் தங்கவேலு அவர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாதென்பதை கிராமியப் பாடல்களாக பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறப்பு விருந்தினரான எம்.பாரதி மோகன் திட்ட அலு வலர், காஜா மலை மகளிர் மன்றம் திருச்சி – மதுபானம், போதைப்பொருள் உபயோகிப்பதால் வரும் தீமைகளையும் தவிர்க்கும் முறைகளையும் எடுத்துரைத்து போதை மறுவாழ்வு மய்யங்களின் செயல்பாடு குறித்தும் விரிவாக விளக்கினார்.
இறுதியாக வணிகவியல் மூன்றாமாண்டு மாணவர் எம்.வினைகுமார் நன்றியுரை கூறினார். முனைவர் ஆனந்த் ஜெரார்டு, இணைப்பேராசிரியர் அவர்களின் ஆலோசனைப் படி சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி ஹேசல் சமீர் கான் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் நூற்றெழுப துக் கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏப்ரல் 17 – நிகழ்ச்சி -2
எதிர்கால சந்ததியினருக்காக
“எங்கள் அனுவபமும் வெளிப்பாடும், எல்லாமே எதிர்கால சந்ததியினருக்காக” என்ற தலைப்பில் ஓசானம் முதியோர் இல்லத்தில் சமூக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஜி.விமலா, மய்ய நிர்வாகி ஒருங்கிணைறந்த சேவை மையம் 181 அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில்:- இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து முதியவர்களும் தமது தள்ளாடும் வயதில், தனித்து விட்டாலும் தளராமல் எவ்வாறு தலை நிமர்ந்து வாழலாம் என்றும் முதியவர்கள் எவ்வாறு தனிமையில் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டும் என்ற சில யுக்திகளையும் எடுத்து கூறினார்.
ஆதனைத் தொடர்ந்து “மூத்த குடிமக்கள் உதவி எண் 145678 அமைப்பின் பிரியங்கா அவர்கள் கருத்துவீர வழங் கினார். அவர் தமது உரையில்:- இந்த உதவி எண் வழியாக மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் இலவசமாக பெறலாம் என்றும், எவ்வாறு ஓய்வூதியம் பெற வேண்டும் என்று சில செயல்பாடுகளை பற்றியும் விளக்கினார். இறுதி நிகழ்வாக “கை சுவடு வண்ணம்” என்ற செயல்பாடுகளை திவ்யா, ஒருங்கிணைந்த சேவை மய்யம் அவர்கள் தொடங்கி வைத்தார். ஓசானம் முதியோர் இல்லத்தின் துணை தலைவர் இதய அரசு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியானது முனைவர் – பரமேஸ்வரர், சமூகப் பணித்துறையின் தலை வர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அவர்களின் ஆலோசனைப்படி மு.அஸ்வதாரிணி சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவி இந் நிகழ்ச்சினை ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்ச்சியில் முதியோர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
ஏப்ரல் – 18 – நிகழ்ச்சி 3
போதைப் பொருள் தவிர்க்க விழிப்புணர்வு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை சார்பில் வேலம்மாள் கல்வி நிறுவனத்தில், போதைப்பொருள் மற்றும் குடிப்பழக் கத்தை தவிர்க்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் 11ஆம் வகுப்பு மாணவி இனியா வரவேற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து பள்ளியின் முதல்வர், ஜெபாஸ்டின் ராபர்ட் க்ளைவ் தலைமையுரை வழங்கினார். அவர்தம் உரையில் மது அடிமையினால் ஏற்படும் விளைவுகளையும், ஆபத்துகளையும் பற்றி மாணவர்களிடையே எடுத்துக் கூறினார். அதனைத்தொடர்ந்து பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழக மாணவ ஆலோசகர் லில்லிப் புஷ்பம் சிறப்புரையாற்றினார்.
அவர்தம் உரையில்:- மாணவர்களிடையே மன ஆரோக்கியத்தை பேனும் வழிமுறைகளையும் மன உளைச்சலை தவிர்க்கும் வழிகளையும் பற்றி பல்வேறு விளக்கங்களுடன் எளிய முறையில் எடுத்துரைத்தார். அடுத்ததாக சிறீ விக்டோரியா மறுவாழ்வு மய்யத்தின் ஆலோசகர் ரஞ்சித்குமார் அவர்கள் இணைப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் இளைஞர்களின் மன உளைச்சல் காரணமாக பல்வேறு போதை பழக்கங்களுக்கு வழிவகுக்கின்றது. எனவே மனஉளைச்சலை தவிர்த்து மகிழ்வுடன் வாழ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை சமூகப்பணித்துறை பேராசிரியர் முனைவர் ஆனந்த்ஜெரார்டு வழிகாட்டுதலில் சமூகப்பணி முதலாமாண்டு மாணவி ஹேசல் சமீர் கான் ஒருங் கிணைத்தனர். இதில் வேலம்மாள் பள்ளியின் 200 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி – 4 – ஆரோக்கியம் – நல்வாழ்வு
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சமூக நல அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மய்யம் இணைந்து “ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு” என்ற தலைப்பில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்வதார் கிரேஷ் ஆதரவற்ற மகளிர் குறுகிய கால தங்கும் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை மாணவி சுவேதா வரவேற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஒருங் கிணைந்த சேவை மய்ய நிர்வாகி விமலா தலைமையுரை வழங்கினார். அதில் நேரத்தை வீணாக்காமல் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் பயன் அடையுமாறு கூறினார். அடுத்தாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிலோமினா சாந்தினி சிறப்புரை வழங்கினார். ஆரோக்கிய மான வாழ்வே நலமான வாழ்வு என்றும் நல்ல உணவு பழக்கவழக்கங்களை பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சேவை மய்ய மூத்த ஆலோசகர் திவ்யா மற்றும் ஸ்டெல்லா தாளாளர் ஸ்வதார் கிரஹ் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக, சமூகப் பணித்துறை மாணவி சுவேதா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஸ்வதார் கிரஷ் ஆதரவற்ற மகளிர் குறுகிய கால தங்கும் விடுதியில் குழந் தைகள் மற்றும் பெற்றோர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஏப்ரல் – 18 – நிகழ்ச்சி – 5
முதியோர்களின் உளவியல் ஆரோக்கியம்
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைகழகத்தின் முதியோர்களின் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்து தல் பற்றிய விழிப்புணர்வு சமூகப்பணித்துறை சார்பில் மதர்தெரசா நிறுவனத்தின் ஜாய் ஹோமில் முதியோர்களின் மத்தியில் நடத்தப்பட்டது.
இதில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவி ஆர்த்தி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு மதர் தெரசா நிறுவனத்தின் தலைவர் முனைவர் சவரிமுத்து தலைமை வகித்தார். அவர் தம் உரையில்:- முதியோர்களை 60 வய துள்ள இளைஞர்கள் எனக் கூறி நிகழ்கால மன வருத்தங்க ளுக்காக எதிர்காலத்தை இழந்துவிடக் கூடாது என்று விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து முனைவர் ஜான் வின்சென்ட் கிரைஸ்ட் மகளிர் கல்லூரியின் துணைமுதல்வர் சிறப்புரை யாற்றினார். அவர்தம் உரையில்:- கே.எப்.சியின் நிறுவனர் ஹார்லாண்ட் சாண்டர்ஸின் 40 வயது சாதனையையும், காந்தியடிகள் மற்றும் அன்னை தெரசாவின் கடைசிகால அயராத உழைப்பையும் மேற்கோள் காட்டி மற்றும் பல்வேறு புத்துணர்வு செயல்பாடுகளையும் வழங்கி ஊக்கமூட்டினார். இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை உதவிப் போராசிரியர் முனைவர் ஞானராஜ் அவர்களின் ஆலோ சனைப்படி முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவி கவிநிலவு ஒருங்கிணைந்து நடத்தி நன்றியுரை வழங்கினார்.
ஏப்ரல் – 18 – நிகழ்ச்சி – 6
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் கும்பகோணம் ரிவிஷிஷிஇல் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில்:- மனதையும், உடலையும் ஆரோக்கிய மாக வைத்துக்கொள்வதின் முக்கியத்துவத்தை பற்றியும் மன தைரியத்துடன் ஊக்கத்துடனும் வாழ வேண்டும் என்று மக்களிடையே எளிய முறையில் எடுத்துரைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் ரத்தினகுமார் வந்தனா, சரவண கலந்து கொண்டு பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இதில் 50க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சி முனைவர் ஞானராஜ் உதவிப் பேரசிரியர் சமூகப்பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ஆலோசனைப்படி முதலாமாண்டு சமூகபணித்துறை மாணவன் விஷ்ணு பகவத் ஒருங்கிணைந்து நடத்தி நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சி – 7
வளமான வாழ்விற்கான மறு சுழற்சி
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின சார்பாக வளமான வாழ்விற்கான மறுசுழற்சி பற்றிய விழிப் புணர்வு திருவையாறு ஏப்ரல் 18 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை மற்றும் திருவையாறு தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் “வாழ்க்கை சுழற்சிக்கான மறுசுழற்சி என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தணர் குறிச்சியில் நடைப்பெற்றது.
சமூகபணிதுறை முதலாமாண்டு மாணவி தெபோரால் வரவேற்புரை வழங்கினார். பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் தஞ்சை மாவட்ட நகர ஒருங்கிணைப்பாளர் தனபால் அறிமுகவுரை வழங்கினார். திருவையாறு தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் அவர்கள் தம் உரையில்:- மக்களுக்கான அத்தியாவசியமான அரசுத் திட்டங்கள் பற்றியும் மேலும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் சுற்றுச் சூழலை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற வேண்டும் என்றார். அதுமட்டுமல்லாமல், குப்பைகளை 16 வகையாக பிரிக்கலாம் என்றும் – அதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும் என்றார். அந்தணர்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி நாகராஜன் மற்றும் அய்ந்தாம் வார்டு கவுன்சிலர் இருவரும் தம் உரையில் சமூகபணி துறையின் தன்னார்வத்தினை பாராட்டினார். திருவையாறு தேர்வுநிலை பேரூராட்சியின் மேற்பார்வையாளர்விஜயமுருகன் தனது இணைப் புரையில் மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்து வத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சி முனைவர் ஞானராஜ் உதவிப்பேராசிரியர் சமூகப்பணித்துறை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அவர்களின் ஆலோசனைப் படி முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவி லிடியா தேவ குமாரி ஒருங்கிணைத்து நடத்தி நன்றியுரை வழங் கினார். இதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி – 8- 20.04.2023
தஞ்சாவூர் – பிசியோதெரபி முகாம்
சமூகப்பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சமூகபணி துறை சார்பாக தஞ்சையில் உள்ள கிரோஸிள்ண்ட் மறுவாழ்வு மய்யத்தில் மன ஆரோக்கியத்திற்கான பிசியோதெரபி முகாம் நடத்தப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவி ஹேசல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இளஞ்செழியன், (பிசியோதெரபிஸ்ட் சிறீ சாரதா பிசியோ தெரபி கிளினிக்) அவர்கள் தலைமை வகித்தார். பிசியோ தெரபி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் திரஷா, சத்யப் பிரியா மற்றும் ஆர்.திரிஷா ஆகியோர் உதவி புரிந்தனர். தொடர்ந்து செல்வி காயத்திரி பிறை மறுவாழ்வு இல்லத்தின் காப்பாளர் தஞ்சாவூர் அவர்கள் பாராட்டு உரை வழங்கினார். இம்முகாமானது முனைவர் பரமேஸ்வரன், சமூகப் பணி துறையின் தலைவர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அவர்களின் ஆலோசனைப் படி எஸ்.சசிதர், சமூகப்பணித் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஒருங்கிணைந்து நடத்தி அனைவருக்கும் நன்றி யுரை வழங்கினார். இம்முகாமிற்கு 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி – 9
மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு….
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மற்றும் சி.எஸ்.அய் மனவளர்ச்சி குன்றி யோருக்கான விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளி இணைந்து, பள்ளியின் சிறப்பு கல்வியாளர் குழந்தைகளின் தேவைகளை கண்டறியும் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.
இதில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவி செல்வி வெற்றி வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்துறை ஆராய்ச்சி மாணவர் செல்வி மேரி டயானா சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில்:- சிறப்பு ஆசிரியர்களின் தாய்மைப் பண்புகள் பற்றியும், ஆசிரியர்கள் குழந்தை களிடம் உருவாக்குதல், உருப்படுத்துதல், உருமாற்றுதல் என அனைத்தையும் எவ்வாறு கண்டறிவது என எளிமையாக எடுத்துரைத்தார். சி.எஸ்.அய். அன்பு இல்லத்தின் சிறப்புப் பள்ளி பாதுகாவலர் ரவிகுமார் தன் வாழ்த்துரையில்:- சாத னையாளர்கள் ஓய்வில்லாமல் உழைப்பாளர்கள் என்பதை மேற்கொள்காட்டி, சிறப்புப் பள்ளி ஆசிரியர்களும் மாண வர்களுடன் இணைந்து சாதனை புரிய வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். இதில் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சி பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை தலைவர் முனைவர் பரமேஸ்வரன் ஆலோ சனைப்படி முதலா மாண்டு சமூகப்பணித்துறை மாணவி சஹானா ஒருங்கிணைந்து நடத்தி நன்றியுரை வழங்கினார்.