பாரதிய ஜனதா கட்சியின் தொடர்புடைய சம்பவங்கள் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் கால பரோல் மற்றும் சொகுசு வாழ்க்கை
குர்மீத் ராம் ரஹீம் சிங்: தேரா சச்சா சவுடா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங், 2017இல் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். மேலும், பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும் பெற்றார். அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது, தேர்தல் காலங்களில் அவருக்கு அடிக்கடி பரோல் வழங்கப்பட்டது. உதாரணமாக, 2024 – அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு 20 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது. 2020 ஆண்டு முதல் 2024 வரை அவர் 259 நாள்கள் பரோலில் இருந்துள்ளார், இவை பெரும்பாலும் தேர்தல்களுடன் ஒத்துப்போகின்றன.
ராஜபோக வாழ்க்கை மற்றும் பெரிய வரவேற்பு
ஆசாராம் பாபு: சாமியார் ஆசாராம் பாபு, 2013இல் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். அவரது மகன் நாராயண் சாய் கூட இதே போன்ற குற்றத்தில் தண்டனை பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பழைய காலத்தில் ஆசாராமை “பாபுஜி” என்று புகழ்ந்துள்ளனர். இது காணொலிகளில் பதிவாகியுள்ளது. சிறையில் அவருக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 2025இல் இவருக்கு உடல்நலக் காரணங்களால் ஆறு மாத பிணை வழங்கப்பட்டது.
அப்போது அவருக்கு பூக்களும், ஆரத்தியும் கொண்டு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. சில அறிக்கைகள் அவரை தங்கமுலாம் பூசிய தேரில் அமர வைத்துச் சென்றதாக கூறுகின்றன. மேலும் பாஜக பிரமுகர்கள் வெளிப்படையாக இதில் பங்கேற்றதாக விமர்சனங்கள் உள்ளன.
மாணவியின் புகார் திருப்பம்
சுவாமி சின்மயானந்த்: மேனாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக உறுப்பினருமான சாமி சின்மயானந்த், 2019இல் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மாணவி புகார் அளித்தபோது, அவர் ரகசியமாக செய்த காட்சிப் பதிவை காவல்துறைக்கு அளித்தார். ஆனால், காவல் துறையினர் மாணவி மீது “எக்ஸ்டார்ஷன்” (பணம் பறிக்க முயற்சி) என்று குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்தனர். மாணவியின் நண்பர்கள் மூவரும் இந்த ‘எக்ஸ்டார்ஷன்’ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கத்துவா சிறுமி ஆசிபா வழக்கு
2018இல் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது முஸ்லிம் சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கோயில் அர்ச்சகர், அவரது மகன் உள்ளிட்ட இந்து ஜாக்ருதி மஞ்ச் உறுப்பினர்கள் குற்றவாளிகள் ஆவர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக அமைச்சர்கள் லால் சிங் சவுத்ரி மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா தேசியக் கொடி ஏந்தி திரளான பா.ஜ.க.வினரோடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தைப் பெற்றது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் மும்பை-டில்லி நெடுஞ்சாலையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
கண்காணிப்புக் கருவியின் ஒளிப்படப் பதிவை ஊழியர் வெளியிட்டதால் அந்த ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
