ஏஅய் சிறந்த கூட்டாளிதான்- ஆனால், நம்மை ஆளக்கூடாது!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட தத்துவம் என்ற பெயரில் வரும் திரைப்பட வசனம்: “பணத்தின் பின்னே நாம் போகக்கூடாது. நம் பின்னால்தான் பணம் வர வேண்டும்” என்பது. ஆனால், இன்று ஏஅய் என்ற ‘செயற்கை நுண்ணறிவு’ நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது. ‘ஏஅய் பின்னால் போகாதே ஏஅய்யை உனக்கானதாக மாற்று’ என்பதுதான்!

ரெடிட்.காம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் ஏஅய் பயன்படுத்துபவர்களில் 58 விழுக்காட்டினர் காலையில் அலுவலகம் வந்ததும் ஏஅய் செயலியிடம், “குட்மார்னிங் ஹவ் ஆர் யு?” என்று எல்லாம் சொல்கிறார்களாம்.

அதுமட்டுமா! வீட்டில் உள்ள பிரச்சினைகள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை என வெளியில் சொல்ல முடியாதவற்றையெல்லாம் ஏஅய் செயலில் சொல்லித் தொலைக்கிறார்களாம்?

இது எவ்வளவு பெரிய மூடத்தனம் ஏஅய் செயலியிடம் குட்மார்னிங் சொல்வதும் கண்ணாடியில் நம்மை நாமே வணக்கம் சொல்வதும் ஒன்றுதான்.

நீங்கள் பகிரும் தகவல்கள் பாதுகாப்பானதா?

ஏஅய்-யிடம் உங்கள் தனிப்பட்ட கவலைகளையும், அலுவலக ரகசியங்களையும் பகிரும்போது நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: “நீங்கள் எதை உள்ளீடாக (Input) கொடுக்கிறீர்களோ, அதுவே ஏஅய்-க்கு பயிற்சியாக (Training Data) மாறுகிறது.”

இதன் விளைவாக ஏற்படும் முக்கிய ஆபத்துகள் இதோ:

  • தகவல் கசிவு (Data Leakage): நீங்கள் பகிரும் உங்கள் நிறுவனத்தின் ரகசியத் திட்டங்கள் அல்லது தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை ஏஅய் சேமித்து வைத்துக்கொள்ளும். பின்னாளில் வேறு யாராவது அது தொடர்பான கேள்வியைக் கேட்கும்போது, உங்கள் ரகசியத் தகவல்கள் அவர்களுக்குப் பதிலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • விளம்பர நிறுவனங்களின் இலக்கு: நீங்கள் பகிரும் உங்கள் உடல்நலம் அல்லது மனநலம் சார்ந்த கவலைகள், உங்களை விளம்பர (மருந்து) நிறுவனங்கள் குறிவைக்க (Targeted Ads) பயன்படுத்தப்படலாம்.
  • அடையாளத் திருட்டு (Identity Theft): உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி, பணிபுரியும் இடம் போன்ற விவரங்களை ஏஅய்-யிடம் சொல்லும்போது, அவை தரவுத் தளங்களில் (Database) சேமிக்கப்படுகின்றன. இது ஹேக்கர்களுக்கு (Hackers) சாதகமாக அமைந்துவிடக்கூடும்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

  1. பெயர் தெரியாத பயன்பாடு (Anonymity): ஏஅய்-யிடம் பேசும்போது உங்கள் பெயர், தொலைப்பேசி எண் அல்லது இருப்பிடத்தைக் குறிப்பிடாதீர்கள்.
  2. அலுவலகத் தரவுகள்: உங்கள் நிறுவனத்தின் ரகசியக் கோப்புகளை (Confidential Files) ஒருபோதும் ஏஅய் செயலிகளில் பதிவேற்றம் செய்யாதீர்கள்.
  3. அமைப்புகள் (Settings): பெரும்பாலான ஏஅய் செயலிகளில் “Chat History & Training” என்ற வசதியை அனைத்து (Turn Off) வைக்கும் வசதி உள்ளது. அதைத் தேடிச் சென்று முடக்குங்கள்.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தேடுபொறி அல்ல; அது ஒரு தனிப்பட்ட உதவியாளர், ஏன், ஒரு சிறந்த கூட்டாளி (Partner) கூட. ஆனால், “ஏஅய்-யோடு இணைந்து நாம் சிந்திக்கிறோமா? அல்லது நம் சிந்தனைத் திறனை ஏஅய்-யிடம் அடகு வைத்து விடுகிறோமா?”

ஏஅய் வழங்கும் பதில்களைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. இது நமது சுயசிந்தனையை மழுங்கடித்துவிடும். எனவே, ஏஅய்-யை எதற்காக, எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும்.

‘ஏஅய் பயன்படுத்துவதில் புத்திசாலிகள்’ எந்தக் கருவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதை எப்படிச் சரியாகக் கையாள வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் கொண்டவர்கள்.

‘ஏஅய் பயன்படுத்தும் போதிய சுய அறிவில்லாதவர்கள்’ போதிய புரிதல் இன்றி, ஏஅய் கொடுக்கும் தகவல்களைக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்

கண்மூடித்தனமான நம்பிக்கையும்
அதன் ஆபத்துகளும்

ஏஅய் மீது அதீத நம்பிக்கை வைப்பது ஒருவகையான குருட்டுத்தனம். இதனால் ஏஅய் செய்யும் தவறுகளோ, அதில் உள்ள பிழைகளோ நமது கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். மாறாக, ஏஅய் மீது நம்பிக்கை இருந்தாலும், அதன் பதில்களைச் சரிபார்க்கும் பக்குவம் அவசியம். அந்தப் பதில் எதன் அடிப்படையில் சொல்லப்பட்டது? அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா? என ஆய்ந்து பார்ப்பதே ‘இணைந்து சிந்தித்தல்’ (Co-thinking) ஆகும்.

சிந்திக்கும் சங்கிலித் தொடர்

ஏஅய் உரையாடல் கருவில் ஒரு பதிலை மட்டும் பெற்றுக்கொண்டு நகர்ந்துவிடக் கூடாது. அவற்றிடம் தொடர்ச்சியாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஒரு முடிவுக்கு அது எப்படி வந்தது என்பதைப் படிப்படியாக விளக்கச் சொல்லுங்கள்.

ஒரு பிரச்சினைக்கு ஏஅய் சொல்லும் தீர்வு தவிர்த்து, வேறு மாற்று வழிகள் உண்டா என்று கேட்டுப் பாருங்கள்.

“ஏஅய்-யை உங்களைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள்.” வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திவிட்டு மாணவர்களிடம் கேள்வி கேட்பது போல, நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட பிறகு, அதிலிருந்து உங்களைச் சோதனை செய்ய ஏஅய்-யைப் பணிக்கலாம். இது உங்கள் புரிதலை மேம்படுத்துவதோடு, பிழைகளையும் சரி செய்யும்.

ஏஅய் என்பது ஒரு கருவி மட்டுமே. அது நம்மை வழிநடத்த அனுமதிக்காமல், நாம் அதைச் சரியாக வழிநடத்த வேண்டும். அப்போதுதான் நமது சிந்திக்கும் திறன் வளருமே தவிர, அழியாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *