சென்னை, ஜன.2 சென் னையில், புத்தாண்டுக் கொண்டாட் டத்துக்கான முக்கிய இடமான (‘ஹாட் ஸ்பாட்’டான )மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் அன்று இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இரவு 12 மணியை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகார முள் 12 மணியை தொட்டவுடன், புத்தாண்டு வாழ்த்து (‘ஹாப்பி நியூ இயர்’) என்று வாழ்த்து முழக்கங் களை எழுப்பியும், ‘கேக்’ வெட்டியும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங் களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தர வின் பேரில் 19 ஆயிரம் காவல் துறையினர் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ‘டிரோன்’ கேமராக்கள் மூலமாக வும் மக்கள் கூட்டத்தை கண் காணித்தனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், இரு சக்கர வாகன சாகசம் செய்பவர்கள், மது போதையில் வாகனங்களை ஓட்டு பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக நகர் முழுவதும் 426 இடங்களில் தடுப்புகள் அமைத்து சட்டம்-ஒழுங்கு காவல்துறையினரும், போக்கு வரத்து காவல்துறையினரும் ஒருங்கிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமையும் வகையில் சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் 31.12.2025 அன்று 10 மணி முதல் மூடப்பட்டன. புத்தாண்டு நாளான கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக சென்னை மாநகரில் டிசம்பர் 31 அன்று மோட்டார் சைக்கிள் விபத்துகளோ, குற்ற செயல்களோ எதுவும் நடை பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சென்னையில் எந்த இடத் திலும் விபத்தால் உயிரிழப்பு, குற்றச்சம்பவங்கள் நடக்கவில்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததால் புத்தாண்டு கொண் டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவி ல்லை என்று சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
